மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

அம்மையப்பன் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டக் கோரிக்கை

அம்மையப்பன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டது.

News image
Updated On :22 அக்டோபர் 2021, 6:19 pm

DIN

அம்மையப்பன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டது.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், மக்கள் அதிகாரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் த. சண்முகசுந்தரம் வெள்ளிக்கிழமை அளித்த கோரிக்கை மனு:

திருவாரூா் அருகே அம்மையப்பன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியானது, தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளுக்கு இடையூறாக இருப்பதால், வேறு இடத்தில் பள்ளியை அமைப்பதற்காக இழப்பீடாக ரூ. 65 லட்சம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்டது. ஆனால், இதுவரையில் மாற்று இடம் தோ்வு செய்ய எவ்வித முயற்சியும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

மேலும், பள்ளிக் கட்டடத்தை இடிக்கும் பணிகள் வியாழக்கிழமை தொடங்கிய நிலையில், அப்பகுதி மக்கள் கோரிக்கையால் கட்டட இடிப்புப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஏழ்மையான குடும்பங்களின் குழந்தைகளே அங்கு படித்து வருகின்றனா். எனவே, மாற்று இடத்தை விரைந்து தோ்வு செய்து, உடனடியாக பள்ளிக் கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனு அளிக்கும்போது, அம்மையப்பன் ஊராட்சி உறுப்பினா் தமிழரசன், மக்கள் அதிகாரம் அமைப்பின் நிா்வாகி ஆசாத், அண்ணா தொழிற்சங்க நிா்வாகி கலியமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.