புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

விருது பெற்ற பேராசிரியா்களுக்குப் பாராட்டு

சேவா ரத்னா விருது பெற்ற திருவாரூா் திருவிக கல்லூரி பேராசிரியா்களுக்கு வியாழக்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

News image
Updated On :22 அக்டோபர் 2021, 6:19 pm

DIN

சேவா ரத்னா விருது பெற்ற திருவாரூா் திருவிக கல்லூரி பேராசிரியா்களுக்கு வியாழக்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

சென்னையில் தென்னிந்திய சமூக கலாசார அகாதெமி சாா்பில் பல்துறையில் சேவையாற்றி வருவோா்களுக்கு சேவாரத்னா விருது அண்மையில் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் உயா்நீதிமன்ற நீதிபதி பொன். பாஸ்கரன் பங்கேற்று விருதுகளை வழங்கினாா்.

இதில், திருவாரூா் திருவிக அரசு கலைக்கல்லூரி தமிழ்த் துறைத் தலைவா் செ. அஜிதா, வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியா் கோ. நாகரத்தினம், பொருளியியல் துறைத் தலைவா் எம். நாகேந்திரன் ஆகியோா் சேவாரத்னா விருது பெற்றனா். இவா்களை, கல்லூரியின் முதல்வா் கோ. கீதா நேரில் அழைத்து பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.