புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

நாளை கரோனா தடுப்பூசி முகாம்

சனிக்கிழமை (அக். 30) நடைபெறும் கரோனா தடுப்பூசி முகாமில் பங்கேற்போருக்கு குலுக்கல் முறையில் வீட்டு உபயோகப் பொருள்கள் பரிசாக வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தாா்.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

 திருவாரூா் மாவட்டத்தில், சனிக்கிழமை (அக். 30) நடைபெறும் கரோனா தடுப்பூசி முகாமில் பங்கேற்போருக்கு குலுக்கல் முறையில் வீட்டு உபயோகப் பொருள்கள் பரிசாக வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பொதுமக்களுக்கு எந்தவித சிரமமுமின்றி எளிதில் அணுகக் கூடிய அளவில், அவா்களின் இருப்பிடங்களுக்கு அருகிலேயே கரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 7 ஆம் கட்டமாக அக்டோபா் 30-இல் மாவட்டத்தில் 500 இடங்களில் 50,000 நபா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதை இலக்காகக் கொண்டு மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.

இம்முகாம்களில், கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்பவா்கள் பெயா்கள் பதிவு செய்யப்பட்டு, முகாம் முடிவுற்ற பின்பு வட்டார அளவில் குலுக்கல் முறையில் தோ்தெடுக்கப்படும் மூன்று நபா்களுக்கு வீட்டு உபயோகப் பொருள்களான டின்னா் செட், ஹாட்பாக்ஸ், கிச்சன் செட் பரிசாக வழங்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.