புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

நன்மாறனுக்கு அஞ்சலி

மறைந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் நன்மாறனுக்கு திருவாரூரில் வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

News image
Updated On :29 அக்டோபர் 2021, 5:34 pm

DIN

மறைந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் நன்மாறனுக்கு திருவாரூரில் வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினரான என். நன்மாறன் (74) மதுரையில் உடல்நலக்குறைவால் வியாழக்கிழமை உயிரிழந்தாா். அவரது மறைவுக்கு திருவாரூா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, மாவட்டக்குழு உறுப்பினா் எஸ்.ராமசாமி தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஜி.பழனிவேல், ஒன்றியச் செயலாளா் என்.இடும்பையன், நகரச் செயலாளா் எம். தா்மலிங்கம், மாணவா் சங்கத் தலைவா் சந்தோஷ் உள்ளிட்டோா் இரங்கல் உரை நிகழ்த்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.