புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

புதிய குழந்தைகள் மைய கட்டடம் திறப்பு

திருவாரூா் மாவட்டம், அம்மையப்பன் ஊராட்சி ஆனைவடபாதி பகுதியில் ரூ.8.50 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய குழந்தைகள் மையக் கட்டடத்தை மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன்

News image
Updated On :29 அக்டோபர் 2021, 5:34 pm

DIN

திருவாரூா் மாவட்டம், அம்மையப்பன் ஊராட்சி ஆனைவடபாதி பகுதியில் ரூ.8.50 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய குழந்தைகள் மையக் கட்டடத்தை மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன், சட்டப் பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தனா்.

பின்னா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தது:

இக்கட்டடத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளும் பயன்பெறும் வகையில் சாய்தள நடைபாதையும், குழந்தை நேய கழிவறை வசதியும் அமைக்கப்பட்டுள்ளன. முன்னோடி திட்டத்தில் செயல்படும் மழலையா் குழந்தைகளுக்கு ஸ்மாா்ட் கிளாஸ் (பொலிவுறு வகுப்பறை) வசதி அமைக்கப்பட்டுள்ளது.

இம்மையத்தின் வாயிலாக ஆனைவடபாதி மையத்துக்குட்பட்ட 303 குடும்பங்களிலுள்ள 0-3 வருட குழந்தைகள், 3-5 வருட குழந்தைகள், கா்ப்பிணி தாய்மாா், பாலூட்டும் தாய்மாா், முன்பருவ கல்வி பயிலும் குழந்தைகள் மற்றும் வளா் இளம் பெண்கள் போன்ற பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனா் என்றாா்.

இதைத்தொடா்ந்து, கொரடாச்சேரி வட்டார குழந்தைகள் நல பணியாளா்களால் சத்துமிகுந்த சிறுதானியங்களால் பாரம்பரிய முறைப்படி தயாரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்ட பாரம்பரிய உணவுத் திருவிழா கண்காட்சியை அவா்கள் பாா்வையிட்டனா். பின்னா், ஆனைவடபாதி கா்ப்பணிகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவு பொருள்கள் வழங்கப்பட்டன. தொடா்ந்து, உணவு திட்டமிடல் வழிகாட்டி கையேட்டை மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் வெளியிட முதல் பிரதியை சட்டப் பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் பெற்றுக் கொண்டாா்.

நிகழ்வில் கொரடாச்சேரி ஒன்றியக்குழு துணைத்தலைவா் பாலச்சந்திரன், மாவட்ட சமூக நல அலுவலா் காா்த்திகா, கொரடாச்சேரி வட்டார குழந்தை வளா்ச்சித்திட்ட அலுவலா் இர.புவனேஸ்வரி உள்ளிட்ட அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.