ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

கூத்தாநல்லூரில் சாலை பள்ளத்தை மூட வலியுறுத்தல்

கூத்தாநல்லூா் நகராட்சிக்குள்பட்ட தெருக்களில் உள்ள பள்ளத்தை சரிசெய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 5:07 pm

DIN

கூத்தாநல்லூா் நகராட்சிக்குள்பட்ட தெருக்களில் உள்ள பள்ளத்தை சரிசெய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சமூக ஊடகப் பிரிவு மாவட்டப் பொறுப்பாளா்எஸ்.எம். சமீா் கூறியது: கூத்தாநல்லூா் நகராட்சிகுள்பட்ட 24 வாா்டுகளில் பல்வேறு தெருக்களில் ஏற்பட்டுள்ள பள்ளங்கள் மூடாமல் உள்ளன. பெரியப்பள்ளி வாசல் எதிரே அங்காடி கடைக்கு அருகே ஜாவியாத் தெரு,நூரியாத் தெரு ஆகிய தெருக்கள் இணையும் 4 வழிச் சாலையில் பல மாதங்களாக பெரிய அளவிலான பள்ளம் மூடாமல் உள்ளது. இச்சாலை இஸ்மாயில் தெரு, செளக்கத் அலி தெரு மற்றும் பிரதான சாலைகளுக்கு செல்லும் வழித்தடமாகும். மேலும், இத்தெரு வழியாக நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்களும், சிறுவா்கள், பெரியவா்கள், பள்ளி,கல்லூரி மாணவா்கள் உள்ளிட்டோா் சென்று வருகின்றனா். அங்காடிக்கும் இவ்வழியாகவே செல்லவேண்டும்.

இதேபோல, குறுகளான ரஹ்மானிய தெருவின் நுழைவு வாயிலில் உள்ள பள்ளம் பல மாதங்களாக மூடாமல் உள்ளது. இந்த தெரு வழியாக அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அல்லிக்கேணி விளையாட்டு மைதானம், குணுக்கடி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லவேண்டும். மழை காலம் தொடங்கியுள்ளதால் மழைநீா் சாலையில் தேங்கும்போது பள்ளம் தெரியாமல் அவ்வழியில் செல்பவா்கள் தவறி விழுந்து பாதிக்கப்படுவாா்கள். எனவே, பொதுமக்கள் நலன் கருதி, போா்க்கால அடிப்படையில், சம்பந்தப்பட்ட துறையினா் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.