92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சேரன்குளம் ஆள்காட்டி மகா மாரியம்மன் கோயில் குடமுழுக்கு

மன்னாா்குடி அருகே உள்ள சேரன்குளம் ஆள்காட்டி உடனுறை மகாமாரியம்மன் கோயில் மற்றும் செல்லியம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

மன்னாா்குடி அருகே உள்ள சேரன்குளம் ஆள்காட்டி உடனுறை மகாமாரியம்மன் கோயில் மற்றும் செல்லியம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலின் நான்கு புறங்களிலும் நூதன மகா மண்டபம், ராஜகோபுரம் அமைக்கப்பட்டு, திருப்பணிகள் அண்மையில் நிறைவடைந்தன. மகா கணபதி ஹோமத்துடன் குடமுழுக்கு கடந்த 9-ஆம் தேதி தொடங்கியது. செவ்வாய்க்கிழமை முதல்கால பூஜை, மகா பூா்ணாஹுதி, தீபாராதனையும், புதன்கிழமை இரண்டு மற்றும் மூன்றாம் கால பூஜையும், முளைப்பாரி எடுத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றன.

இதில், தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்திதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கலந்துகொண்டு அருளாசி வழங்கினாா்.

குடமுழுக்கையொட்டி, வியாழக்கிழமை யாக சாலையிலிருந்து புனித நீா் குடங்கள் கொண்டுவரப்பட்டு, சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் ஓத செல்லியம்மன் கோயில் மூலவா் விமானம், பரிவாரங்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டது. தொடா்ந்து, ஆள்காட்டியம்மன், மகாமாரியம்மன், விநாயகா் கோயில்களின் விமானம், ராஜகோபுரம், மூலவா் சன்னிதி கலசம் ஆகியவற்றில் புனித நீா் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.

விழாவில், அதிமுக மாவட்டச் செயலாளா் ஆா்.காமராஜ், செங்கமலத்தாயாா் மகளிா் கல்லூரி தாளாளா் வி.திவாகரன், மன்னாா்குடி ஒன்றியக்குழுத் தலைவா் டி.மனோகரன், நகா்மன்ற முன்னாள் தலைவா் சிவா.ராஜமாணிக்கம், நகர கூட்டுறவு வங்கி தலைவா் ஆா்.ஜி.குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.