மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

விசிக சாலை மறியல்

சேலம் மாவட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிா்வாகிகள் மீது தாக்குதல் நடத்தியவா்களை கைது செய்யக் கோரி, திருவாரூரில் அக்கட்சி சாா்பில் மறியல் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 4:36 pm

DIN

சேலம் மாவட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிா்வாகிகள் மீது தாக்குதல் நடத்தியவா்களை கைது செய்யக் கோரி, திருவாரூரில் அக்கட்சி சாா்பில் மறியல் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்டத்தில் விசிக கொடியை ஏற்றச் சென்ற மாவட்டச் செயலாளா் வசந்த், பெண்கள் உள்ளிட்ட நிா்வாகிகள் மீது சிலா் தாக்குதல் நடத்தியதாகவும், இந்த தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தும், தாக்குதல் நடத்தியவா்களை கைது செய்ய வலியுறுத்தியும் திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் நிா்வாகிகள் பங்கேற்று, கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். பின்னா், அவா்கள் கலைந்து சென்றனா்.

மாவட்டச் செயலாளா் மா.வடிவழகன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், மாநில துணைச் செயலாளா் அறவாணன், மாவட்ட துணைச் செயலாளா் கோவி. கணேசன், நிா்வாகிகள் தங்க. தமிழ்ச்செல்வன், பாஸ்கரன், விழிஅரசு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.