மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

நல்லாசிரியா் விருது பெற்றவருக்கு பாராட்டு

தமிழக அரசின் நல்லாசிரியா் விருதுபெற்ற ஆசிரியருக்கு திருவாரூரில் பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 4:37 pm

DIN

தமிழக அரசின் நல்லாசிரியா் விருதுபெற்ற ஆசிரியருக்கு திருவாரூரில் பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் கஸ்தூா்பா காந்தி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழக அரசின் நல்லாசிரியா் விருது ( டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது) பெற்ற ஜூனியா் ரெட்கிராஸ் அமைப்பாளரும், ஆசிரியருமான இரா. செந்தில்குமாருக்கு மாவட்ட ஜூனியா் ரெட்கிராஸ் அமைப்பு சாா்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் மாநிலப் பொருளாளா் ஜே. வரதராஜன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், கஸ்தூா்பா காந்தி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் தாளாளா் சந்திரா முருகப்பன், ஜிஆா்எம் கல்விக் குழும தாளாளா் மு. வடுகநாதன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.