கூத்தாநல்லூரில் அரசு மகளிர் கல்லூரி அறிவிப்பு: மாணவிகள் மகிழ்ச்சி

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி அமைக்கப்படுவதாக தமிழக அரசால் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பைக் கேட்ட மாணவிகள் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி அடைந்தனர்
கூத்தாநல்லூரில் அரசு மகளிர் கல்லூரி அறிவிப்பு: மாணவிகள் மகிழ்ச்சி
கூத்தாநல்லூரில் அரசு மகளிர் கல்லூரி அறிவிப்பு: மாணவிகள் மகிழ்ச்சி

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி அமைக்கப்படுவதாக தமிழக அரசால் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பைக் கேட்ட மாணவிகள் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி அடைந்தனர்.

தமிழகத்தில் 10 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளதாக சட்டப் பேரவையில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில், திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் வட்டமும் இடம் பெற்றுள்ளது.

கூத்தாநல்லூர் வட்டத்தில், வடபாதிமங்கலம், கூத்தாநல்லூர், கமலாபுரம்  மற்றும் 55 கிராமங்கள் உள்ளன. தமிழக அரசின் இந்த அறிவிப்பால்  500க்கும் மேற்பட்ட கிராமங்களைச்  சேர்ந்த மாணவிகள் பெரும் பயன் அடைவார்கள்.

கூத்தாநல்லூர், பூதமங்கலம், அத்திக்கடை, பொதக்குடி உள்ளிட்ட ஊர்கள் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கின்றனர். கூத்தாநல்லூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல ஊர்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான மாணவிகள் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, மேல் படிப்பு படிப்பதற்காக, தனியார் கல்லூரிகளைத் தேடி மன்னார்குடி, தஞ்சை, கும்பகோணம், திருச்சி, சென்னை உள்ளிட்ட வெளியூர்களுக்குத்தான் செல்ல வேண்டிய நிலை நிலவி வருகிறது.

த்தாநல்லூரில் புதிதாக அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி அமைக்கப்பட உள்ளது குறித்து, அப்பகுதியைச் சேர்ந்த மாணவிகள் பேசும்போது. “சின்ன சிங்கப்பூர் என அழைக்கப்படும் கூத்தாநல்லூரில் தமிழக அரசு மகளிர் கல்லூரி அமைப்பதாக அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழக அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” எனத் தெரிவித்தனர்.

மேலும், “கல்லூரிப் படிப்பைத் தொடர வெளியூர்களுக்கு செல்ல வேண்டி இருப்பதால் பெண்கள் மேல்படிப்பு படிப்பதற்கு பெற்றோர்கள் சம்மதிப்பதில்லை. இதன் விளைவால், பல மாணவிகள் கல்வியறிவு இருந்தும், வெளியூர் செல்ல வேண்டும் என்ற ஒரே காரணத்தாலேயே கல்லூரிப் படிப்பை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. 

மாணவிகளாகிய நாங்கள் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, திருவாரூர் சட்டப் பேரவை தொகுதி உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் உள்ளிட்டோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com