வேளாண் சட்டங்களுக்கு எதிராக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தை திரும்பப் பெற வேண்டும்

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக தமிழக அரசு பேரவையில் நிறைவேற்றியுள்ள தீர்மானத்தினை உடனடியாத திரும்ப பெற வேண்டும் என விவசாய தமிழர் விழிப்புணர்வு நலச் சங்கம்
மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசும் விவசாய தமிழர் விழிப்புணர்வு நலச் சங்க மாநிலத் தலைவர் உ.ரவிச்சந்திரன்.
மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசும் விவசாய தமிழர் விழிப்புணர்வு நலச் சங்க மாநிலத் தலைவர் உ.ரவிச்சந்திரன்.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக தமிழக அரசு பேரவையில் நிறைவேற்றியுள்ள தீர்மானத்தினை உடனடியாத திரும்ப பெற வேண்டும் என விவசாய தமிழர் விழிப்புணர்வு நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் விவசாய தமிழர் விழிப்புணர்வு நலச் சங்கத்தின் மாநிலத் தலைவர் உ.ரவிச்சந்திரன், திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் பேசியது, தமிழக சட்டப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ள மத்தியஅரசின் மூன்று வேளாண் சட்டத் திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தீர்மானம் குறித்து தமிழக விவசாயிகள் அனைவருக்கும் வருத்தம் அளிக்கும் வகையில் அமைந்து விட்டது.

இந்த மூன்று வேளாண் சட்டம் விவசாயிகளுக்கு சாதகமாக உள்ளதா அல்லது பாதகமாக உள்ளதா என அரசுத்துறை அதிகாரிகள், வேளாண் வல்லுனர்கள், விவசாயிகளுடன் கலந்து பேசி, இதில், ஏற்பட்டும் ஒத்தக்கருத்தின் படி தீர்மானத்தினை நிறைவேற்றி இருக்கலாம். தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளதை ஆட்சிக்கு வந்து நூறு நாள்களில் நிறைவேற்ற வேண்டும் என அவசர கோலத்தில் எதிர்ப்பு தீர்மான நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

புதிய வேளாண் திருத்த சட்டம் மூலம் வேளாண் பொருள்களை உற்பத்தி செய்யும் விவசாயி அந்த பொருளுக்கான விலையினை நிர்ணயம் செய்யும் உரிமை பெற்ற தகுதி உண்டு என திருத்த சட்டத்தில் உள்ளது. மன்னார்குடி பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட பொருளை வெளிநாடு, வெளி மாநிலம், வெளியூர் என எங்கு சென்றும் லாபத்திற்கு விற்பனை செய்யலாம் என சட்டத்தில் விவசாயிகளுக்கு உரிமையும், பாதுகாப்பும் வழங்கப்பட்டிருப்பதால் அனைத்து தரப்பு விவசாயிகளும் மகிழ்ச்சியுடன் இந்த சட்டத்தை வரவேற்கும் நிலையில்.கட்சி அரசியல் காரணத்திற்காக மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களை தமிழகஅரசு எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றி இருப்பது விவசாயிகளுக்கு வருத்ததை ஏற்படுத்தி இருக்கிறது. 

தமிழகஅரசின் இந்த தீர்மானத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். எனவே, தமிழக முதல்வர் இது குறித்து மறுபரிசீலினை செய்து, புதிய வேளாண் திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப் பேரவையில் நிறைவேற்றியுள்ள தீர்மானத்தினை உடனடியாக திரும்ப பெற வேண்டும். தமிழகஅரசு, வேளாண்மை துறையினையின் பெயரை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை என மாற்றி இருப்பதையும். வேளாண்மைக்கு என தனி நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்து இருப்பதையும் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.

தற்போது, குறுவை தொகுப்பு திட்டம் மற்றும் சம்பா சாகுபடிக்கு செய்யப்பட்டுள்ள நிலையில் யூரியா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இது செயற்கையாக ஏற்படுத்தப்பட்டுள்ள தட்டுப்பாடு என்ற கருத்து நிலவி வருகிறது.  இது குறித்து, தமிழக முதல்வர் ஆய்வு செய்து உரத்தட்டுப்பாட்டினை நீக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயம் சம்மந்தமான பிரச்னைளுக்கு தீர்வு காண முதல்வர், துறை அமைச்சர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திடும் போது விவசாயிகள் சங்க பிரதிநிதிகளையும் அழைத்து உண்மை நிலைபற்றி அறிந்து கொண்டு இறுதி தீர்வு காண வேண்டும் என்றார்.

பேட்டியின் போது, மாநிலச் செயலர் யு.செல்லதுரை, மாநில பொருளாளர் யு.கோகுல், செயற்குழு உறுப்பினர்கள் சு.இருளப்பன், ஆர்,பாலதண்டாயுதம் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com