கூத்தாநல்லூர்: 5 பாசன வாய்க்கால்கள் சுத்தப்படுத்தும் பணி நிறைவு
கூத்தாநல்லூர்: 5 பாசன வாய்க்கால்கள் சுத்தப்படுத்தும் பணி நிறைவு

கூத்தாநல்லூர்: 5 பாசன வாய்க்கால்கள் சுத்தப்படுத்தும் பணி நிறைவு 

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகராட்சியில் 5 பாசன வாய்க்கால்கள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன. 

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகராட்சியில் 5 பாசன வாய்க்கால்கள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன. 

மழைக்காலம் தொடங்கி விட்டதால் முன்னெச்சரிக்கையாக, கூத்தாநல்லூர் நகராட்சியில் உள்ள வடிகால் மற்றும் கால்வாய்களை சுத்தம் செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவுப்படி, ஆணையர் ராஜகோபால் முன்னிலையில், கூத்தாநல்லூர் நகராட்சிக்குட்பட்ட பாசன வாய்க்கால்கள், மழை நீர் வடிக்கால்கள் உள்ளிட்டவைகள் சுத்தம் செய்யப்பட்டன. 

சனிக்கிழமை நேருஜி சாலையில், மேலப் பனங்காட்டாங்குடி பாசன வாய்க்கால் பணிகளை, உதவி ஆட்சியர் ( பயிற்சி ) எம்.தனலெஷ்மி பார்வையிட்டார். தொடர்ந்து, ஆணையர் ராஜகோபால் கூறியது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கினங்க, கூத்தாநல்லூர் நகராட்சியில் பாசன வாய்க்கால்கள் தூர் வாரும் பணி, மழை நீர் தேங்கியுள்ள வடிகால்களில் தூர்வாரி, செடி, கொடிகளை அகற்றப்பட்டு வருகிறது. 

மேலும், கழிவுகள் எடுக்கப்பட்டு, அடைப்புகளும் திறக்கப்பட்டு வருகின்றன. மழைக் காலங்களில் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாதபடி, குறுகிய இடங்களின் பாதைகளை தேவையான அளவுக்கு அகலப்படுத்தப்பட்டும் வருகிறது. நகராட்சியில், ஜன்னத் நகர், மேலப்பனங்காட்டாங்குடி, குணுக்கடி, மேல் கொண்டாழி, திருவாரூர்  பிரதான சாலை உள்ளிட்ட 5 பாசன வாய்க்கால்கள் தூர் வாரப்பட்டுள்ளது. நேருஜி சாலை, தேர் வடக்குத் தெரு, மாதா கோயில் சந்து, சின்னக் கூத்தாநல்லூர் உள்ளிட்ட 18 தெருக்களில் மழை நீர் வடிகால்கள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன. 

தொடர்ந்து, பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், அனைத்து இடங்களிலும் ப்ளீச்சிங் பவுடர் தூவப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டும் வருகிறது. தூய்மைப் பணியில், சுகாதார ஆய்வாளர் கி.அருண்குமார், சுகாதார மேற்பார்வையாளர்கள் வாசுதேவன், அண்ணாமலை உள்ளிட்டோர் கவனித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com