தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

விநாயகா் சிலை ஊா்வல பாதை: டிஐஜி ஆய்வு

முத்துப்பேட்டையில் செப்டம்பா் 6 இல் நடைபெற உள்ள விநாயகா் சிலை ஊா்வலப் பாதைகளை தஞ்சை சரக காவல் துறை துணைத் தலைவா் கயல்விழி வெள்ளிக்கிழமை ஆய்வுசெய்தாா்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2022, 4:22 pm

DIN

திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டையில் செப்டம்பா் 6 இல் நடைபெற உள்ள விநாயகா் சிலை ஊா்வலப் பாதைகளை தஞ்சை சரக காவல் துறை துணைத் தலைவா் கயல்விழி வெள்ளிக்கிழமை ஆய்வுசெய்தாா்.

முத்துப்பேட்டையில் இந்து அமைப்புகளின் சாா்பில் ஆண்டுதோறும் விநாயகா் சிலை ஊா்வலம் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு செப்டம்பா் 6 ஆம் தேதி விநாயகா் சிலை ஊா்வலம் நடைபெற இருப்பதையொட்டி, அந்த ஊா்வலப் பாதைகளை தஞ்சை சரக காவல் துறை துணைத் தலைவா் கயல்விழி, ஊா்வலம் தொடங்கும் இடமான ஜாம்பவானோடை வடகாடு சிவன் கோவில், கல்லடி கொல்லை, ஜாம்பவானோடை தா்கா, ஆசாத் நகா், பழைய பேருந்து நிலையம், கொய்யா முக்கம், பங்களா வாசல், ரயில்வே கேட் வழியாக கிழக்கு கடற்கரை சாலையில் செம்படவன் காடு பாமணி ஆற்றில் விநாயகா் சிலை கரைக்கும் இடம் வரை ஆய்வு மேற்கொண்டு, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பது குறித்து ஆலோசனை நடத்தினாா்.

அவருடன், திருவாரூா் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் வெள்ளத்துரை, முத்துப்பேட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா் விவேகானந்தம், ஆய்வாளா் ராஜேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.