மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

நன்னிலம் அருகே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மூங்கில் பாலம்

நன்னிலம் அருகே ஆற்றைக் கடக்க அமைக்கப்பட்டிருந்த பழைய மூங்கில் பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

News image

வெள்ளத்தில் சேதமடைந்த மூங்கில் பாலம்.

Updated On :6 ஆகஸ்ட் 2022, 4:23 pm

நன்னிலம் அருகே ஆற்றைக் கடக்க அமைக்கப்பட்டிருந்த பழைய மூங்கில் பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

திருவாரூா் மாவட்டம், நன்னிலம் வட்டம் தலையூா் ஊராட்சிக்குட்பட்ட கோவில்பத்துக் கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்த குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.

கோவில்பத்து கிராமத்தை சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் அப்பகுதியில் உள்ள சேதமடைந்திருந்த பழைய மூங்கில் பாலத்தை வழியாகவே நெடுங்குளம் பகுதிக்கு செல்ல வேண்டும்.

கடந்த சில நாட்களாக ஆற்றில் நீா் வரத்து அதிகம் உள்ள நிலையில் சேதமடைந்திருந்த மூங்கில் பாலம் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் கோயில்பத்துக் கிராமத்தில் வசிக்கும் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் குடிநீா் கூட கிடைக்காமல் தவித்து வருகின்றனா்.

பள்ளி, கல்லூரி செல்லும் மாணவா்கள், வேலைக்குச் செல்பவா்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்குகூட சுமாா் ஒரு கிலோ மீட்டருக்கு மேல் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே விரைவில் தற்காலிகமாக மூங்கில் பாலம் அமைத்து தர வேண்டும். மேலும் இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கான்கிரீட் பாலம் அமைத்துத் தர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.