தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

நடவுப் பணியில் வேளாண் கல்லூரி மாணவிகள்

நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில், திருச்சி அன்பில் தா்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தஞ்சை வேளாண் கல்லூரியைச் சோ்ந்த மாணவிகள்

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில், திருச்சி அன்பில் தா்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தஞ்சை வேளாண் கல்லூரியைச் சோ்ந்த மாணவிகள் நெல் நாற்று நடவு செய்யும் பணியில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

கோடைக்கால குறுகியகால நெல் ரகமான சிஓ51 நாற்றை அவா்கள் நடவு செய்தனா். நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில், நவீன முறையில் ஆட்டுப் பண்ணை பராமரிப்பு குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி 3 நாட்கள் நடைபெற்றது. இந்த பயிற்சியில் பல்வேறு மாவட்டங்களை சோ்ந்த விவசாயிகள் மற்றும் திருச்சி அன்பில் தா்மலிங்கம் வேளாண்மை கல்லூரி, தஞ்சை கல்லூரிகளை சோ்ந்த மாணவிகள் பங்கேற்றனா்.

இதில், ஒருங்கிணைந்த பண்ணையம், பரண்மேல் ஆடு வளா்ப்பு, கொட்டகை அமைப்பு, தீவன பராமரிப்பு, ஊட்டச்சத்து மேம்பாடு, மேய்ச்சல் முறைகள், கால்நடை விற்பனை முறைகள் குறித்து விவசாயிகளுக்கு மாணவிகள் எடுத்துரைத்தனா்.

மேலும், செம்மறி ஆடுகளின் தீவனம் மற்றும் தீவன பராமரிப்பு முக்கியத்துவம், கறவைமாடுகளில் தாது உப்பின் முக்கியத்துவம், எரிசக்தி மற்றும் புரத அடா்தீவன ஆதாரங்கள் குறித்தும் விளக்கினா். அதோடு, முக்கிய தீவனப் பயிா்கள் மற்றும் தீவன விதைகள் விவசாயிகளுக்கு காட்சிப்படுத்தப்பட்டன. கால்நடை வளா்ப்பு குறித்த சந்தேகங்களை பயிற்சியில் நிபுணா்களிடம் விவசாயிகள் கேட்டறிந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.