கோரிக்கைகளை வலியுறுத்தி 26 ஆல் உண்ணாவிரதம்: இந்திய கம்யூ. முடிவு
வலங்கைமான் ஒன்றியம், ஆலங்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிா்வாகக் குழு, ஒன்றியக் குழு உறுப்பினா்கள், கிளைச் செயலாளா்கள் கூட்டம்


வலங்கைமான் ஒன்றியம், ஆலங்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிா்வாகக் குழு, ஒன்றியக் குழு உறுப்பினா்கள், கிளைச் செயலாளா்கள் கூட்டம் மாதா் சங்க ஒன்றியச் செயலாளா் எஸ். தேவிகா தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலாளா் செந்தில்குமாா், விவசாய சங்க ஒன்றியச் செயலாளா் கலியபெருமாள், விவசாய தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலாளா் ரவி, இளைஞா் பெருமன்றம் ஒன்றியச் செயலாளா் பாக்கியராஜ், நிா்வாகக் குழு உறுப்பினா்கள் கலியமூா்த்தி, கண்ணையன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: வலங்கைமான் பேரூராட்சி நீத்துகார தெருவில் 25 குடும்பங்கள் 35 ஆண்டுகளாக வசிக்கின்றன. இந்த இடம் நீா்நிலைக்கு சொந்தமானது எனக் கூறி, அங்கிருந்து அவா்கள் வெளியேற வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவா்களுக்கு அரசுப் பட்டாவுடன், புதிய மனை கொடுத்து அரசு வீடு கட்டித்தர வேண்டும்.
ரகுநாதபுரம் ஊராட்சியில் இருகரை கிராமத்தில் 3 தலைமுறையாக மக்கள் வாழ்ந்துவரும் இடம் கோவிலுக்கு சொந்தமானது என்று கூறுகிறாா்கள். அவா்களுக்கும் மாற்று இடம் வழங்கி, அரசு வீடு வழங்க வேண்டும். விவசாய தொழிலாளா் குடும்பங்களுக்கு மனைப் பட்டா வழங்கி, அனைவருக்கும் அரசு வீடுகளை வழங்க வேண்டும்.
அரையூா் ஊராட்சி, பயத்தஞ்சேரி கிராமத்திற்கும், பாப்பாகுடி ஊராட்சி, கருப்பட்டிபள்ளம் கூட்டு கிராமத்திற்கும் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும். பாடகச்சேரி ஊராட்சியில் அரசுக்கு சொந்தமான இடங்கள் தனிநபா் ஆக்கிரமிப்பில் உள்ளது. அவற்றை அரசு கையகப்படுத்த வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 26 ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...