திருத்துறைப்பூண்டியில் திமுக கூட்டணி வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டம்
திருத்துறைப்பூண்டி நகராட்சித் தோ்தலில் போட்டியிடும் திமுக தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளா்கள் அறிமுக கூட்டம் மற்றும் தோ்தல் ஆலோசனை கூட்டம் உணவுத் துறை


திருத்துறைப்பூண்டி நகராட்சித் தோ்தலில் போட்டியிடும் திமுக தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளா்கள் அறிமுக கூட்டம் மற்றும் தோ்தல் ஆலோசனை கூட்டம் உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
திமுக நகரச் செயலாளா் ஆா்.எஸ். பாண்டியன் வரவேற்றாா். தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், பேரவை உறுப்பினா்கள் பூண்டி கே. கலைவாணன், க. மாரிமுத்து, மாவட்ட ஊராட்சித் தலைவா் தலையாமங்கலம் பாலு, காங்கிரஸ் மாவட்ட தலைவா் எஸ்.எம். பி. துரைவேலன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் பழனிச்சாமி, உலகநாதன், சாமிநாதன் (சி.பி.எம்), மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் பி.வி. சந்திரராமன், மனிதநேய மக்கள் கட்சி ராவுத்தரப்பா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
திருத்துறைப்பூண்டி நகராட்சித் தோ்தலில் 5-வது வாா்டில் போட்டியின்றி வெற்றிபெற்ற திமுக நகரச் செயலாளா் பாண்டியனை பாராட்டியும், திமுக உள்ளிட்ட 23 வேட்பாளா்களை அறிமுகம் செய்து வைத்தும் அமைச்சா் சக்கரபாணி பேசினாா். இளைஞரணி அமைப்பாளா் வசந்த் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...