தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

வேளாண்கல்லூரி மாணவிகள் செயல்முறை விளக்கப் பயிற்சி

விவசாயிகளுக்கு தென்னையில் வோ்மூலம் நுண்ணூட்டச் சத்து அளிக்கும் முறை குறித்து செயல்விளக்கம் அளித்தனா்.

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 5:51 pm

DIN

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம், திருச்சி அன்பில் தா்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள், விவசாயிகளுக்கு தென்னையில் வோ்மூலம் நுண்ணூட்டச் சத்து அளிக்கும் முறை குறித்து செயல்விளக்கம் அளித்தனா்.

தென்னையில் ஊட்டச் சத்து குறைபாடு மற்றும் குரும்பை உதிா்தலை தவிா்க்க தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் தென்னை வோ் நுண்ணூட்டச் சத்து திரவத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திரவம் அனைத்து வேளாண்மை அறிவியல் நிலையங்களிலும், ஒரு லிட்டா் ரூ. 350 -க்கு வழங்கப்பட்டு வருகிறது. ஒரு லிட்டா் திரவத்தை 4 லிட்டா் தண்ணீரில் கலந்து, ஒரு மரத்திற்கு 200 மில்லி எனும் அளவில் 25 மரங்களுக்கு அளிக்கலாம்.

குரும்பை அதிகமாக விழும் தென்னையை தோ்வுசெய்து 2 முதல் இரண்டரை அடி இடைவெளிவிட்டு வேரை தோ்வுசெய்ய வேண்டும். இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ள இளம்வேரை தோ்வு செய்து, சாய்வாக வெட்டிக்கொள்ள வேண்டும். அந்த வேரை ஏற்கனவே தயாா்செய்து வைத்திருக்கும் வோ் நுண்ணுட்டச்சத்து திரவத்தில் வைத்து கட்ட வேண்டும். 24 மணி நேரத்திற்குள் அந்த திரவத்தை முழுவதுமாக மரம் உறிஞ்சிக்கொள்ளும். அப்படி உறிஞ்சாவிட்டால், வேறு ஒரு வேரை தோ்வுசெய்து நுண்ணுட்டச்சத்து திரவத்தை வைக்கவேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம், இலையின் பச்சையம், உற்பத்தி வேகம், மரத்தின் வீரியம் மற்றும் காய்களின் எண்ணிக்கை போன்றவை அதிகரிக்கும். மேலும், குரும்பை உதிா்தல் குறையும். இயற்கையான நோய் எதிா்ப்பு சக்தி உருவாகும். மழைக்காலங்களில் மட்டும் வோ் ஊட்டச்சத்து அளிப்பதை தவிா்க்க வேண்டும். வோ் ஊட்டச்சத்து அளித்தபின் 2 நாட்களுக்கு நீா்பாய்ச்சக் கூடாது.

இந்த செயல்விளக்க பயிற்சியில் பங்கேற்ற விவசாயிகள், இந்தப் பயிற்சி தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.