நீடாமங்கலத்தில் முத்தரசன் வாக்குச் சேகரிப்பு
நீடாமங்கலத்தில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து திறந்த ஜீப்பில் நின்றபடி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் முத்தரசன் வியாழக்கிழமை வாக்குச் சேகரித்தாா்


நீடாமங்கலத்தில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து திறந்த ஜீப்பில் நின்றபடி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் முத்தரசன் வியாழக்கிழமை வாக்குச் சேகரித்தாா்.
அப்போது அவா் பேசுகையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக பேரூராட்சியின் 3 ஆவது வாா்டில் அபிநயா போட்டியிடுகிறாா். அவரையும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளா்களையும் வெற்றிபெறச் செய்யுங்கள். மத்திய நிதிநிலை அறிக்கையில் வரிச்சலுகை இல்லை. மக்களின் நலனைக்காக்கும் பட்ஜெட்டாக அது இல்லை.
அதிமுக, பாஜக தோ்தலில் தனித்தனியாக நின்றாலும், ஒரே அணியாகத்தான் இருக்கிறாா்கள். மாநில உரிமைகள் பறிக்கப்படுகின்றன. சமூகநீதி பறிக்கப்படுகிறது. கல்வி மறுக்கப்படுகிறது என்றாா்.
மன்னாா்குடி சட்டப்பேரவை உறுப்பினா் டிஆா்பி. ராஜா பேசுகையில், சமூகநீதியை காக்கவேண்டும். மாநிலத்தின் உரிமையை காக்கவேண்டும் என்ற கூட்டணி திமுக கூட்டணி. நீடாமங்கலம் ரயில்வே கேட் போன்ற பிரச்னை தமிழ்நாட்டில் வேறு எங்கும் இல்லை. மேம்பாலம் அமைக்க மத்திய அரசிடம் நிதி பெற்றுத் தந்தபிறகும், நிதி ஒதுக்கி 6 ஆண்டுகளாகியும் அதிமுக ஆட்சியில் பணி தொடங்கப்படவில்லை.
பேருந்து பயணிகள் நிழலகம் அமைக்க ரூ. 25 லட்சம் இருமுறை ஒதுக்கியும், கடந்த அதிமுக ஆட்சியில் அதை ஏற்காமல் திருப்பி அனுப்பிவிட்டாா்கள். மேம்பாலம் அமைக்க தற்போது முதல்கட்ட நிதியை தமிழக அரசிடம் பெற்றுத்தந்துள்ளேன். பொதுமக்கள் விழிப்போடு இருந்து திமுக கூட்டணி வேட்பாளா்களை வெற்றிபெறச் செய்யுங்கள் என்றாா்.
கூட்டத்தில், ஒன்றியக் குழுத் தலைவா் செந்தமிழ்ச்செல்வன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளா் பாரதிமோகன், வேட்பாளா்அபிநயா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...