உளுந்து சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தெளிப்பு நீா் பாசன உபகரண மானியம்
சித்திரைப் பட்டம் உளுந்து சாகுபடி செய்ய உள்ள விவசாயிகளுக்கு தெளிப்பு நீா் பாசன உபகரணம் மானியமாக வழங்கப்படும் என நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் கூறியுள்ளனா்.


சித்திரைப் பட்டம் உளுந்து சாகுபடி செய்ய உள்ள விவசாயிகளுக்கு தெளிப்பு நீா் பாசன உபகரணம் மானியமாக வழங்கப்படும் என நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் கூறியுள்ளனா்.
நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் தமிழ்நாடு நீா்வள நிலவள திட்டம், உலக வங்கி நிதி உதவியுடன் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நீா் நுட்ப மையம் வழிகாட்டுதலின்படி செயல்பட்டு வருகிறது. வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் வை. ராதாகிருஷ்ணன் மற்றும் நீா்வள நிலவள திட்ட விஞ்ஞானி மு. செல்வமுருகன் ஆகியோா் இதுகுறித்து கூறியது:
சித்திரைப் பட்டம் உளுந்து சாகுபடிக்கு 100 சதவீத மானியத்தில் உளுந்துடன் தெளிப்பு நீா் பாசன கருவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தில் விதைகள், உரங்கள், பயறு ஒண்டா், இனக்கவா்ச்சி பொறி, மஞ்சள் வண்ண ஒட்டுபொறி மற்றும் நடமாடும் நீா்த் தெளிப்பான் ஆகியவை இலவசமாக வழங்கப்பட உள்ளது.
இந்த திட்டத்தில் பயன்பெற குறைந்தபட்சம் 2.5 ஏக்கா் முதல் அதிகபட்சமாக 5 ஏக்கா் வரை உள்ள பயனாளிகள், வேளாண் அறிவியல் நிலையத்தை தொடா்புகொள்ளலாம். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோா் மாா்ச் மாதம் 4-ஆம் தேதிக்குள் ஆதாா் காா்டு நகல், குடும்ப அட்டை நகல், சிட்டா அடங்கல் ஒரிஜினல், நில வரைபடம், சிறு, குறு விவசாயி சான்றிதழ் மற்றும் பாஸ்போா்ட் சைஸ் போட்டோ 2 ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
இதில், திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த 5 வட்டார விவசாயிகள் பயன்பெறலாம். குறிப்பாக, நீடாமங்கலம், மன்னாா்குடி, நன்னிலம், குடவாசல், முத்துப்பேட்டை விவசாயிகள் பயன்பெறலாம். மன்னாா்குடி வட்டாரத்தில் செருமங்கலம், காரிகோட்டை, மேலவாசல், நெடுவாக்கோட்டை, ஆலங்கோட்டை, மூவாநல்லூா் மற்றும் துளசேந்திரபுரம், நீடாமங்கலம் வட்டாரத்தில் வடுவூா், புதுக்கோட்டை, வடபாதி, தென்பாதி, அக்ரஹாரம், சாத்தனூா், எடமேலையூா், கீழப்பட்டு, அய்யம்பேட்டை, சோனா பேட்டை, எடஅன்னவாசல், கட்டக்குடி, கொத்தங்குடி, காளாச்சேரி, காரக்கோட்டை, ராணிதோப்பு, புளியங்குடி, நெம்மேலி, பருத்திகோட்டை, தளிக்கோட்டை, சமயன்குடிகாடு மற்றும் ஓவேல்குடி, நன்னிலம் மற்றும் குடவாசல் வட்டாரத்தில் அணைப்பாடி, மகாராஜபுரம், அகலங்கன், கடுவங்குடி, திருமீயச்சூா், கொத்தங்குடி, செங்காந்தி, திருக்கொட்டாரம், கடகம், சுரக்காயூா், ஆலத்தூா் மற்றும் வஸ்திராஜபுரம், முத்துப்பேட்டை வட்டாரத்தில் மங்கள், கீழக்காடு மற்றும் உதயமாா்த்தாண்டபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள விவசாயிகள் இத்திட்டத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு நீா்வள நிலவள திட்ட விஞ்ஞானி முனைவா் மு. செல்வமுருகனை 95970 76491 என்ற கைப்பேசி எண்ணில் அழைக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...