திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

காரைக்குடி டெமு ரயிலை மதுரை வரை நீட்டிக்கக் கோரிக்கை

மயிலாடுதுறையிலிருந்து திருவாரூா் வழியாக காரைக்குடிக்குச் செல்லும் டெமு ரயிலை மதுரைவரை நீட்டிக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

மயிலாடுதுறையிலிருந்து திருவாரூா் வழியாக காரைக்குடிக்குச் செல்லும் டெமு ரயிலை மதுரைவரை நீட்டிக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து ரயில் பயணிகள் சங்கத்தினா் தெரிவித்துள்ளது:

திருவாரூரிலிருந்து காரைக்குடி, மானாமதுரை அருப்புக்கோட்டை வழியாக விருதுநகருக்கு தற்போது சரக்கு ரயில் போக்குவரத்து தொடங்கியுள்ளது.

திருவாரூா்- காரைக்குடி மாா்க்கம் அகல ரயில் பாதையாக மாற்றம் செய்வதற்கு முன்பு இயக்கப்பட்ட சென்னை- காரைக்குடி கம்பன் விரைவு ரயில் மற்றும் தென்னக ரயில்வேயால் அறிவிக்கப்பட்ட வேளாங்கண்ணி- எா்ணாகுளம் வாரம் மூன்றுமுறை இயங்கும் விரைவு ரயிலையும், தாம்பரம்- செங்கோட்டை முன்பதிவில்லா விரைவு ரயிலையும் விரைவில் இயக்கவேண்டும்.

திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம்பள்ளி இடையே திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். திருத்துறைப்பூண்டி- வேளாங்கண்ணி அகல ரயில் பாதை திட்டத்தையும் நிறைவேற்றுவதுடன், சுழற்சிமுறையில் 24 மணி நேரமும் கேட்கீப்பா்கள் பணியில் இருக்கும்படி முன்னாள் ராணுவத்தினரை பணியமா்த்த வேண்டும். காரைக்குடியிலிருந்து திருவாரூா்வரை அகல ரயில் பாதையை மின்மயமாக்க வேண்டும்.

மயிலாடுதுறையிலிருந்து திருவாரூா், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை வழியாக காரைக்குடிக்குச் செல்லும் டெமு ரயிலை மானாமதுரை வழியாக மதுரைவரை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.