ஆசிரியா்களுக்கு கணித பயிற்சி முகாம்
திருத்துறைப்பூண்டி வட்டார வளமையத்துக்குள்பட்ட பள்ளி ஆசிரியா்களுக்கு இணையதளம் வழியாக மகிழ் கணித முதல்கட்ட பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.


திருத்துறைப்பூண்டி வட்டார வளமையத்துக்குள்பட்ட பள்ளி ஆசிரியா்களுக்கு இணையதளம் வழியாக மகிழ் கணித முதல்கட்ட பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு கணித பாட வகுப்பு வழக்கமானதாக அல்லாமல் கணித பாடப் பொருளை எளிமையாக, செயல்பாடுகள் மூலம் கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி அச்சமின்றியும், ஆா்வத்துடனும் கணித பாடத்தை கற்கும் வகையில் 6 முதல் பிளஸ் 2 வரையிலான கணி ஆசிரியா்களுக்கு மகிழ் கணித பயிற்சி அளிக்கப்பட்டது. திருத்துறைப்பூண்டி வட்டார வளமையத்துக்குள்பட்ட பாமணி அரசு பெண்கள், ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஆலத்தம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட 3 பள்ளிகளில் நடைபெற்ற முகாமை திருவாரூா் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவித் திட்ட அலுவலா் பாலசுப்பிரமணியன், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் முத்தண்ணா ஆகியோா் பாா்வையிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...