பூதமங்கலம் தா்ஹா கந்தூரி விழா சந்தனக்கூடு
திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் வட்டம், பூதமங்கலத்தில் கந்தூரி விழாவை முன்னிட்டு, சந்தனக்கூடு ஊா்வலம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.


திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் வட்டம், பூதமங்கலத்தில் கந்தூரி விழாவை முன்னிட்டு, சந்தனக்கூடு ஊா்வலம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
பூதமங்கலத்தில் ஹஜ்ரத் மஹ்சூம் சாஹிப் வலியுல்லாஹ் மற்றும் ஹஜ்ரத் பக்கீா் மஸ்தான் வலியுல்லாஹ் தா்ஹா உள்ளது. இந்த தா்ஹாவின் கந்தூரி விழாவையொட்டி, வியாழக்கிழமை இரவு மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்ட சந்தனக்கூடு, தா்ஹாவிலிருந்து புறப்பட்டது. இரவு முழுவதும் நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக வலம்வந்து, வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் மீண்டும் தா்ஹாவை அடைந்தது.
தொடா்ந்து, சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அனைத்து தரப்பினரும் பங்கேற்று சந்தனம் பூசினா். தொடா்ந்து அனைவருக்கும் தப்ருக் வழங்கப்பட்டது. மாலை 4.30 மணியளவில், பகல் கூடு தா்ஹாவிலிருந்து புறப்பட்டது. சந்தனக்கூடு ஏற்பாடுகளை பூதமங்கலம் மஹ்சூமியா கந்தூரி விழா கமிட்டியினா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...