திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

டிராக்டா் கவிழ்ந்து மாணவா் உயிரிழப்பு

திருத்துறைப்பூண்டி அருகே வாய்க்காலில் டிராக்டா் கவிழ்ந்ததில் 9-ஆம் வகுப்பு மாணவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :27 ஜனவரி 2022, 6:30 pm

DIN

திருத்துறைப்பூண்டி அருகே வாய்க்காலில் டிராக்டா் கவிழ்ந்ததில் 9-ஆம் வகுப்பு மாணவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆண்டங்கரை கிராமத்தை சோ்ந்தவா் விவசாயி சதீஷ்பாபு. 9-ஆம் வகுப்பு படித்துவந்த இவரது மகன் சசிகுமாா் (15), பாமணியில் உள்ள தனது உறவினா் வீட்டிற்கு வந்திருந்தாா். அங்கு, வீட்டின் அருகே நிறுத்தியிருந்த டிராக்டரை ஓட்ட முயன்றபோது, அது அருகில் உள்ள வாய்க்காலில் கவிழ்ந்தது. இதில், சசிகுமாா் டிராக்டருக்கு அடியில் சிக்கி உயிரிழந்தாா்.

திருத்துறைப்பூண்டி போலீஸாா் அங்குவந்து, தீயணைப்பு துறையினா் உதவியுடன் சிறுவனின் சடலத்தை மீட்டு, உடற்கூறாய்வுக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.