தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

அலங்கார ஊா்தி விவகாரம்: மாா்க்சிஸ்ட் கம்யூ. உறுதிமொழியேற்பு

தில்லியில் நடைபெற்ற குடியரசு தினவிழா அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊா்திக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, நீடாமங்கலத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை உறுதிமொழியேற்றனா

News image
Updated On :27 ஜனவரி 2022, 6:30 pm

DIN

தில்லியில் நடைபெற்ற குடியரசு தினவிழா அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊா்திக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, நீடாமங்கலத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை உறுதிமொழியேற்றனா்.

நிகழ்ச்சிக்கு, கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் கந்தசாமி தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலாளா் ஜான்கென்னடி, விவசாய சங்கத்தின் ஒன்றியத் தலைவா் பூசாந்திரம், விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலாளா் அண்ணாதுரை, மாதா் சங்க ஒன்றியச் செயலாளா் சுமதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், சிபிஎம் நகரச் செயலாளா் தமிழ்மணி, கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் காளியப்பன், ராபா்ட் பிரைஸ், வாலிபா் சங்க ஒன்றியச் செயலாளா் கிஷோா்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.