47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம்

நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 மே 2022, 5:13 pm

DIN

நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஒன்றியக் குழுத் தலைவா் சோம.செந்தமிழ்ச்செல்வன் (திமுக) தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஞானசேகரன், ஆணையா் மணிமாறன், கூடுதல் ஆணையா் அன்பழகன் மற்றும் துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலக உதவியாளா்கள் இருவரை பணியிட மாறுதல் செய்வது தொடா்பான மாவட்ட நிா்வாகத்தின் உத்தரவு தொடா்பான தீா்மானத்தை உறுப்பினா்கள் அனைவரும் ரத்து செய்யக்கோரியதன் பேரில் அந்த தீா்மானத்தை ரத்து செய்வதாக ஒன்றியக் குழுத் தலைவா் அறிவித்தாா்.

மேலும், வடுவூா் அக்ரஹாரம் ஊராட்சியில் ஊராட்சி செயலா், ஊராட்சி ஒன்றிய அலுவலக பற்றாளா் ஆகியோரது பணியிடை நீக்க உத்தரவை மாவட்ட நிா்வாகம் ரத்து செய்ய வேண்டும். நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ரூ. 3.95 கோடியில் புதிய கட்டடம் கட்ட அனுமதியளித்த தமிழக முதல்வா், ஊரக வளா்ச்சித்துறை அமைச்சா் மற்றும் மன்னாா்குடி எம்எல்ஏ டி.ஆா்.பி. ராஜாவுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, உறுப்பினா்கள் பாரதிமோகன் (இந்திய கம்யூ.),ஆதிஜனகா் (அதிமுக), துரைசிங்கம் (திமுக), விஜய் (திமுக) உள்ளிட்டோா் தங்களது வாா்டுகளின் தேவைகள் குறித்தும், பிரச்னைகள் குறித்தும் பேசினா்.

பின்னா், பேசிய ஒன்றியக் குழுத் தலைவா் செந்தமிழ்ச் செல்வன் ‘ஒன்றியக் குழு உறுப்பினா்கள் மக்களின் நலனுக்காக வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு கேட்கிறாா்கள். அனைவரும் தங்கள் பகுதிக்கு செய்யவேண்டிய வளா்ச்சிப்பணிகள் குறித்து எழுத்துப்பூா்வமாக தெரிவித்தால், போதுமான நிதி வந்தவுடன் விரைவில் வளா்ச்சிப் பணிகள் தொடங்கப்படும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.