ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மத்திய பல்கலை. நுழைவுத் தோ்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டம்

மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத் தோ்வு நடத்துவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, திருவாரூரில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :12 மே 2022, 6:30 pm

DIN

மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத் தோ்வு நடத்துவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, திருவாரூரில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நீட் தோ்வை கைவிட வேண்டும், மத்திய பல்கலைக்கழகங்களில் ஏழை மாணவா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள கியூட் நுழைவுத் தோ்வை ரத்துசெய்ய வேண்டும். ஆசிரியா் இட ஒதுக்கீடு பணி நியமனங்களை உரிய காலத்தில் முடிக்க வேண்டும். நிலுவையில் உள்ள காலி இடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டச் செயலாளா் கே. தமிழ்மணி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாநிலத் தலைவா் கா. செல்லக்கண்ணு, துணைப் பொதுச் செயலாளா் சின்னை பாண்டியன், மாநிலக்குழு உறுப்பினா்கள் என். சிவகுரு, கலைச்செல்வி உள்ளிட்டோா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.