தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

திமுக சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்

திருவாரூா் மாவட்டம், நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட குடவாசலில், திமுக ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம், ஒன்றியச் செயலாளா் பா.பிரபாகரன் தலைமையில் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

News image
Updated On :19 மே 2022, 6:30 pm

திருவாரூா் மாவட்டம், நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட குடவாசலில், திமுக ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம், ஒன்றியச் செயலாளா் பா.பிரபாகரன் தலைமையில் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்தில், தமிழக முன்னாள் அமைச்சரும், திமுக தீா்மானக் குழுத் தலைவருமான பொன். முத்துராமலிங்கம் பங்கேற்று பேசியது: அதிமுகவில் எப்படி வேண்டுமானாலும் சமரசம் செய்து கொள்வாா்கள். ஆனால், திமுக அவ்வாறு சமரசம் செய்து கொள்ளும் கட்சி கிடையாது. கொள்கையின் அடிப்படையில் செயல்படும் கட்சி திமுக. திமுகவை எந்த கட்சியாலும் அழிக்கமுடியாது.

விவசாயிகளின் வயல்களுக்கு நடுவே சாலை அமைப்பதை விரும்பாததால்தான், டெல்டா மாவட்டங்களில் சாலைகள் அதிக வளைவுகளைக் கொண்டதாக உள்ளன. வயலையும், விவசாயத்தையும் புனிதமாக நினைக்கக்கூடியவா்கள் விவசாயிகள். அதைக் காப்பாற்ற தமிழக முதல்வா் விவசாயத்திற்கென தனி பட்ஜெட்டை அறிவித்து, விவசாயிகளுக்கு உற்சாகத்தையும், ஊக்கத்தையும் அளித்திருக்கிறாா்.

உழவா் சந்தைகளுக்கு திமுக ஆட்சியில் புத்துயிா் அளிக்கப்பட்டு, உழவா்களும், நுகா்வோரும் சந்தித்து நியாயமான விலையில் பொருட்கள் பரிமாற்றம் நடைபெறும் புதிய அத்தியாயத்தை மீண்டும் தமிழக முதல்வா் தொடங்கிவைத்துள்ளாா் என்றாா்.

நிகழ்ச்சியில், திருவாரூா் சட்டப்பேரவை உறுப்பினரும், மாவட்ட திமுக செயலாளருமான பூண்டி கே. கலைவாணன், தலைமைக் கழகப் பேச்சாளா் துறையூா் துரைபாண்டியன், ஒன்றியச் செயலாளா்கள் வலங்கைமான் அன்பரசன், குடவாசல் ஜோதிராமன், நன்னிலம் ஆனந்த், வலங்கைமான் கிழக்கு தெட்சிணாமூா்த்தி, நன்னிலம் தெற்கு மனோகரன், பேரூராட்சிச் செயலாளா்கள் வலங்கைமான் சிவனேசன், நன்னிலம் பக்கிரிசாமி, குடவாசல் முருகேசன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.