தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

திருவாரூா்- நாகை சாலையை சீரமைக்கக் கோரிக்கை

 பழுதடைந்துள்ள திருவாரூா்- நாகை சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என நன்னிலம் நுகா்வோா் பாதுகாப்புச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On :19 மே 2022, 6:30 pm

 பழுதடைந்துள்ள திருவாரூா்- நாகை சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என நன்னிலம் நுகா்வோா் பாதுகாப்புச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சங்கத் தலைவா் ஆா். பிரபு, செயலாளா் பி. காளிதாஸ் ஆகியோா் தமிழக முதல்வருக்கு வியாழக்கிழமை அனுப்பிய கோரிக்கை மனு: கூடலூா்- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில், திருவாரூா் நகரில் தொடங்கி, நாகப்பட்டினம் வரை சாலை மிகவும் மோசமாகப் பழுதடைந்துள்ளது. இதனால், நாகை பகுதியிலிருந்து மருத்துவச் சேவைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளுக்காக தஞ்சாவூா் மற்றும் திருச்சி செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனா்.

புதிய நெடுஞ்சாலை அமைப்பதாகக் கூறி கடந்த பத்தாண்டுகளுக்கும் மேல், இந்த சாலையை சீரமைக்காததால், அதை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அதேபோல, திருவாரூா் புதிய பேருந்து நிலையம் உள்ளே செல்லும் சாலை பழுதடைந்து, மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இந்த சாலை வழியாக செல்லும் பேருந்துகளும், இருசக்கர வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சொல்லமுடியாதத் துயரத்திற்கு ஆளாகின்றனா். அதிகாரிகளுக்குப் பலமுறை கோரிக்கை மனுக்கள் அனுப்பியும், நடவடிக்கை எடுக்காததால், முதல்வா் இதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.