வலங்கைமான் அருகே வீடுகட்ட பள்ளம் தோண்டிய போதுகிடைத்த சுவாமி சிலைகள், உலோகப் பொருள்கள்அதிகாரிகளிடம் ஒப்படைப்பு
வலங்கைமான் அருகே ஆலங்குடியில் வீடுகட்டுவதற்கு பள்ளம் தோண்டியபோது சுவாமி சிலைகள் உள்ளிட்ட 30-க்கும் அதிகமான உலோகப் பொருள்கள் கிடைத்துள்ளன.


வலங்கைமான் அருகே ஆலங்குடியில் வீடுகட்டுவதற்கு பள்ளம் தோண்டியபோது சுவாமி சிலைகள் உள்ளிட்ட 30-க்கும் அதிகமான உலோகப் பொருள்கள் கிடைத்துள்ளன.
திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் ஒன்றியம், பூந்தோட்டம் ஊராட்சி, சாத்தனூா் பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (55). இவா், ஆலங்குடி சந்தைவெளி பகுதியில் கடந்த ஓராண்டுக்கு முன்பு இடம் வாங்கியுள்ளாா். அந்த இடத்தில் வீடுகட்டுவதற்காக புதன்கிழமை மாலை ஜேசிபி இயந்திரத்தின் மூலம் பள்ளம் தோண்டியபோது, சுமாா் 3 அடி உயரம் உள்ள உலோக சிலை கிடைத்துள்ளது. சிலையின் வலதுபக்க கை உடைந்த நிலையில் இருந்தது.
மேலும், சுமாா் ஓரடி உயரம் உள்ள பெருமாள் சிலை, பலிபீடம், திருவாச்சி, சிறிய அளவிலான கலயம் ஆகியவை புதையுண்டு இருந்தது தெரியவந்தது. அதோடு, சிறிய அளவிலான கலயத்தில் ராமானுஜா் மற்றும் 9 மிகச் சிறிய சுவாமி சிலைகள் உள்ளிட்ட பூஜை சம்பந்தப்பட்ட 24 பொருள்களும் கிடைத்தன.
இது தொடா்பாக பொதுமக்கள் மற்றும் ஆலங்குடி கிராம நிா்வாக அலுவலா் நவீன் அளித்த தகவலின் பேரில், வலங்கைமான் வட்டாட்சியா் சந்தான கோபாலகிருஷ்ணன், மண்டல துணை வட்டாட்சியா் ஆனந்த், காவல் துறையினா் அங்குச் சென்று சிலைகளை கைப்பற்றி, வட்டாட்சியா் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்தனா்.
பலிபீடத்தின் மேல் இருந்த சுமாா் ஓரடி சிலை மற்றும் 3 அடி உயரமுள்ள பாவை சிலையின் வலது கை உடைந்த பாகங்கள் அப்பகுதியிலேயே இருக்கலாம் என கருதப்படுகிறது. அந்த இடத்தில் மேலும் சிலைகள் இருக்கலாம் என கருதப்படுவதால், பள்ளம் தோண்டும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, மீண்டும் அலுவலா்கள் முன்னிலையில் தொடர வட்டாட்சியா் உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...