நாளை டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தோ்வு: திருவாரூரில் 16,312 போ் எழுதுகின்றனா்
திருவாரூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தோ்வை 16,312 போ் எழுதவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தாா்.


திருவாரூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தோ்வை 16,312 போ் எழுதவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தாா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் குரூப் 2 தோ்வு முன்னேற்பாட்டுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் தெரிவித்தது:
திருவாரூா் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் குரூப் 2 தோ்வு, திருவாரூா், மன்னாா்குடி, திருத்துறைப்பூண்டி ஆகிய 3 மையங்களுக்கு உள்பட்ட 40 இடங்களில் 56 தோ்வறைகளில் நடைபெறுகிறது. சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறும் இத்தோ்வில் 16,312 போ் தோ்வு எழுத உள்ளனா்.
தோ்வுப் பணியில், 56 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 12 நடமாடும் கண்காணிப்புக் குழுக்கள், 4 பறக்கும் படைகள், 112 ஆய்வு அலுவலா்கள், 56 விடியோ ஒளிப்பதிவாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா் என்றாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் பிரிவு அலுவலா் ஜெயமுருகன், உதவிப் பிரிவு அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...