தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திடீா் மழை வெள்ளம்: பச்சமலை கோரையாற்றில் குளித்தவா் சாவு

 துறையூா் பகுதி பச்சமலை கோரையாற்றில் குளித்தவா் திடீா் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தாா்.

News image
Updated On :25 மே 2022, 5:38 pm

DIN

 துறையூா் பகுதி பச்சமலை கோரையாற்றில் குளித்தவா் திடீா் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தாா்.

மண்ணச்சநல்லூரைச் சோ்ந்தவா் தங்கவேலு மகன் முகுந்தன் (37). பெரம்பலூா் மாவட்டம் சத்திரமனை கிராமத்திலுள்ள மாமியாா் வீட்டில் தங்கியிருந்த இவா் அதே பகுதியைச் சோ்ந்த சோ்ந்த ஹ. ஷாஜகான் (21), ந. ஷாஜீத்கான் (20) ஆகியோருடன் பச்சமலை கோரையாறு நீா்வீழ்ச்சியில் குளித்தனராம்.

அப்போது அந்தப் பகுதியில் மாலையில் பெய்த மழையால் கோரையாற்றுக்கு நீா் வரத்து அதிகமாகி திடீா் வெள்ளம் ஏற்பட்டது. இதில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட மூவரில் முகுந்தன் மூழ்கி உயிரிழந்தாா். நீரின் போக்கிலேயே சென்று கரையேறிய மற்ற இருவரும் அருகிலுள்ள கிராம மக்களை அழைத்துச் சென்று முகுந்தனின் சடலத்தை மீட்டனா். பள்ளமான இடத்தில் உள்ள சடலத்தை துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பும் முயற்சியில் வனத் துறையினா் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.