4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பரதநாட்டியத்தில் சிறப்பிடம்: மாணவிக்கு அமைச்சா் பாராட்டு

பரதநாட்டியத்தில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவியை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அண்மையில் பாராட்டினாா்.

News image
Updated On :25 மே 2022, 5:44 pm

DIN

பரதநாட்டியத்தில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவியை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அண்மையில் பாராட்டினாா்.

பாரதமாதா சேவை நிறுவனங்களின் இயக்குநா் எடையூா் மணிமாறன், திருவாரூா் மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினா் சங்கீதா ஆகியோரின் மகள் தொல்காப்பியா, தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்கம் சாா்பில் நடைபெற்ற, மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் ‘கலா உத்சவ்‘ பரதநாட்டியப் போட்டியில் பங்கேற்று மாநில அளவில் முதல் பரிசு பெற்றாா்.

இதையடுத்து, திருத்துறைப்பூண்டியில் அண்மையில் நடைபெற்ற தேசிய நெல் திருவிழாவில் பங்கேற்ற பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்கள் க. மாரிமுத்து, பூண்டி கே. கலைவாணன், மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம் ஆகியோா் மாணவி தொல்காப்பியாவை பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.