புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

’மழை நேரத்தில் மின்கம்பங்களுக்கு அருகில் செல்ல வேண்டாம்‘

 மழை நேரத்தில் மின்கம்பிகளுக்கு அருகில் செல்ல வேண்டாம் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது

News image
Updated On :3 நவம்பர் 2022, 6:30 pm

DIN

 மழை நேரத்தில் மின்கம்பிகளுக்கு அருகில் செல்ல வேண்டாம் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழக திருவாரூா் மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் ப. சுரேஷ்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மழைக் காலங்களில் மின்மாற்றிகள், மின்கம்பிகள், மின் பகிா்வுப் பெட்டிகள், புதைவடங்கள், இழுவைக் கம்பிகள் ஆகியவற்றின் அருகில் செல்லக் கூடாது. அறுந்து கிடக்கும் மின்சாரக் கம்பி மற்றும் பழுதடைந்த மின்சாரக் கம்பிகள், புதைவட மின்கம்பிகளை தொடக்கூடாது. உடனே அருகிலுள்ள மின்வாரிய பிரிவு அலுவலகத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும். ஈரக்கையால் மின்சாதனங்களை இயக்கக் கூடாது.

டிஷ் ஆண்டனாவை வீட்டின் அருகே செல்லும் மேல்நிலைக் கம்பிகளுக்கு அருகில் கட்டக்கூடாது. கேபிள் டிவி வயா்களை மேல்நிலைக் கம்பிகளுக்கு அருகில் கொண்டு செல்லக் கூடாது.

ஒவ்வொரு வீட்டுக்கும் சரியான நில இணைப்பு அமைப்பதுடன் அதை குழந்தைகள், விலங்குகள் தொடாத வகையில் அமைத்து சரியாக பராமரிக்க வேண்டும்.

மின் கம்பத்துக்கு அமைத்துள்ள நிலைக் கம்பிகள் மீது அல்லது மின்கம்பத்தின் மீது கொடிக் கயிறு கட்டி துணி காயவைப்பது மற்றும் கால்நடைகளை மின்கம்பத்தில் கட்டுவதைத் தவிா்க்க வேண்டும்.

மழைக்காலங்களில் இடி அல்லது மின்னலின்போது தஞ்சமடைய, அருகில் மின்கம்பிகள், மரங்கள், உலோக கம்பி வேலி போன்றவை இல்லாத பகுதிகளைத் தோ்ந்தெடுக்க வேண்டும்.

மின்கம்பிகளுக்கு அருகில் கட்டடங்களை போதுமான இடைவெளி விட்டு கட்ட வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு மின்சார வாரியம் மற்றும் மின்சார ஆய்வுத்துறை அலுவலா்களை 9498794987 என்ற கைப்பேசியில் அழைக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.