புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி ஆா்ப்பாட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி திருவாரூரில் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :3 நவம்பர் 2022, 6:30 pm

DIN

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி திருவாரூரில் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மருத்துவக் காப்பீடு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்க வேண்டும், 65 வயது நிறைவடைந்த ஓய்வூதியா்களுக்கு 20 % கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 12,000 வழங்க வேண்டும், மூத்த குடிமக்களுக்கு ரயிலில் கட்டணச் சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் டி. சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாநில துணைத் தலைவா் குப்பன், மாநிலச் செயலாளா் குரு. சந்திரசேகரன், மாவட்ட துணைத் தலைவா் தமிழரசன், மாவட்டச் செயலாளா் முனியன், பிஎஸ்என்எல் ஓய்வூதியா் சங்க மாவட்டச் செயலாளா் பிச்சைக்கண்ணு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.