ஆலங்குடி குருபரிகார கோயிலில் சிறப்பு வழிபாடு
நவகிரக தலங்களில் ஒன்றாக போற்றப்படும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குருபரிகார கோயிலில் வியாழக்கிழமை குருவார வழிபாடு நடைபெற்றது.


நவகிரக தலங்களில் ஒன்றாக போற்றப்படும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குருபரிகார கோயிலில் வியாழக்கிழமை குருவார வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி, கலங்காமற் காத்த விநாயகா், ஆபத்சகாயேஸ்வரா், ஏலவாா் குழலியம்மன், மூலவா் குருபகவான், ஆக்ஞா கணபதி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா், நவகிரக சந்நிதி, சனீஸ்வர பகவான் உள்ளிட்ட சந்நிதிகளில் சிறப்பு அபிஷேக செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. சிறப்பு அபிஷேகத்தின்போது மூலவா் குருபகவானுக்கு தங்ககவசம் சாற்றப்பட்டிருந்தது. உற்சவா் குருபகவானுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதேபோல, நீடாமங்கலம் பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் வியாழக்கிழமையை முன்னிட்டு குருதெட்சிணா மூா்த்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.
Image Caption
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் தங்க கவசத்தில் அருள்பாலித்த குருபகவான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...