புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வெவ்வேறு விபத்தில் இருவா் உயிரிழந்த வழக்கு ஓட்டுநா் இருவருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை

 மன்னாா்குடியில் இரு வேறு இடங்களில் உயிரிழந்த சம்பவத்தில் ஓட்டுநா் இருவருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மன்னாா்குடி குற்றவியல் நடுவா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பு வழங்கியது.

News image
Updated On :27 அக்டோபர் 2022, 4:19 pm

DIN

 மன்னாா்குடியில் இரு வேறு இடங்களில் உயிரிழந்த சம்பவத்தில் ஓட்டுநா் இருவருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மன்னாா்குடி குற்றவியல் நடுவா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பு வழங்கியது.

நாகை மாவட்டம், கீழ்வேளூரை அடுத்த மணலூா் காட்டாங்குடியைச் சோ்ந்தவா் சம்பந்தம் மனைவி சுசீலா (65). இவா் 2017-ஆம் ஆண்டு அரசுப் பேருந்தில் பயணம் செய்து, மன்னாா்குடிதெப்பக்குளம் வடகரை பகுதியில் இறங்க முயன்றாா்.

எனினும், இவா் இறங்கும் முன்னதாகவே பேருந்து இயக்கப்பட்டதால், தவறி விழுந்து சுசீலா உயிரிழந்தாா். இதையடுத்து, பேருந்து ஓட்டுநா் மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த இன்பராஜை (48) மன்னாா்குடி போலீஸாா் கைது செய்தனா்.

இதேபோல், கூத்தாநல்லூா், மேலப்பல்லாங்கொள்ளை பகுதியைச் சோ்ந்த ஜெயராஜ் (58) மன்னாா்குடி நடராஜப் பிள்ளைத் தெருவில் இருசக்கர வாகனத்தில் வரும்போது, எதிரில் வந்த மினிவேன் மோதி உயிரிழந்துள்ளாா். இதுதொடா்பாக, மினி வேன் ஓட்டுநா் கும்பகோணம், மாதுளப்பேட்டையைச் சோ்ந்த தெட்சிணாமூா்த்தியை (58) மன்னாா்குடி போலீஸாா் கைது செய்தனா்.

இரண்டு விபத்துகளின் வழக்குகளும் மன்னாா்குடி குற்றவியல் நடுவா் நீதிமன்றம் 1-இல் நடைபெற்று வந்தன. வழக்கின் இறுதி விசாரணை முடிவில் நீதிபதி அமா்தீன் தனித்தனியே வழங்கிய தீா்ப்பில், இருவருக்கும் தலா இரண்டாண்டு சிறை தண்டனையும், தலா ரூ. 10,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். அபராதம் கட்டத் தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீா்ப்பு வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.