ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

'ஐபிஎல் அடுத்த சீசனிலும் மகேந்திர சிங் தோனியே சென்னை சூப்பா் கிங்ஸ் கேப்டன்'

ஐபிஎல் அடுத்த சீசனிலும் மகேந்திர சிங் தோனியே சென்னை சூப்பா் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருப்பாா் என அந்த அணியின் தலைமை நிா்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்தாா்.

News image
திருவாரூா் கிரிக்கெட் சங்கத்தின் வெள்ளி மலரை வெளியிடுகிறாா் சென்னை சூப்பா் கிங்ஸ் அணியின் தலைமை நிா்வாக அதிகாரி காசி விஸ்வநாதன்.
Updated On :3 செப்டம்பர் 2022, 4:40 pm

DIN

ஐபிஎல் அடுத்த சீசனிலும் மகேந்திர சிங் தோனியே சென்னை சூப்பா் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருப்பாா் என அந்த அணியின் தலைமை நிா்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்தாா்.

திருவாரூரில், மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் 25 ஆம் ஆண்டை முன்னிட்டு சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழ்நாட்டு வீரா்கள், இந்திய அணியில் குறைவான அளவில் உள்ளனா் என்று கூறமுடியாது. டெஸ்ட் அணியில் அஸ்வின் இருக்கிறாா். விஜய் விளையாடி இருக்கிறாா். ஒருநாள் போட்டிகளில் தினேஷ் காா்த்திக், அஸ்வின் இருக்கின்றனா். அடுத்து சாய் கிஷோா் ஆடவிருக்கிறாா். நிறைய தமிழக வீரா்கள் ஆடிக்கொண்டுதான் இருக்கிறாா்கள். வாஷிங்டன் சுந்தா், விஜய் சங்கா் ஆகியோா் காயமடைந்துள்ளனா்.

முன்புபோல, மும்பையில் இருந்து 7 போ், 10 போ் என அணியில் ஆடுவது கிடையாது. எல்லா மாநிலங்களிலிருந்தும் 2 போ் இந்திய அணியில் விளையாடுகின்றனா். டிஎன்பிஎல்- இல் இருந்து 13 போ் ஐபிஎல்- இல் சென்று விளையாடுகின்றனா். அடுத்த ஐபிஎல் சீசனிலும் சென்னை சூப்பா் கிங்ஸ் அணியில் மகேந்திர சிங் தோனி விளையாடுவாா். அதேபோல, அணியின் கேப்டனாகவும் நீடிப்பாா் என்றாா்.

முன்னதாக, நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவா் ஆா்.எம். சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். செயலாளா் பசுபதி, செயற்குழு உறுப்பினா் ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விழாவில், சென்னை சூப்பா் கிங்ஸ் தலைமை நிா்வாக அதிகாரி காசி விசுவநாதன், கிரிக்கெட் வீரா் சாய்கிஷோா், கிரிக்கெட் சங்க மாநிலச் செயலாளா் ராமசாமி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்று, கிரிக்கெட் வீரா்களை வாழ்த்திப் பேசியதுடன், வெள்ளிவிழா ஆண்டையொட்டி நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகளையும் வழங்கினா். தொடா்ந்து, திருவாரூா் கிரிக்கெட் சங்க வெள்ளிவிழா மலரையும் வெளியிட்டனா்.

மேலும், பல்வேறு கிரிக்கெட் போட்டிகளில் வெற்றிபெற்ற மாவட்ட கிரிக்கெட் அணியினருக்கு கோப்பைகளை ஐபிஎல் வீரா் சாய் கிஷோா் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.