திருவாரூா் மாவட்டத்தில் பேரளம், வலங்கைமான் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப்.13) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேரளம் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ஜி. பிரபாகா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பேரளம், வேலங்குடி, அதாம்பாா் ஆகிய பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதன்காரணமாக, பேரளம், கொல்லுமாங்குடி, கொட்டூா், பூந்தோட்டம், பாகசாலை, விளாகம், எரவாஞ்சேரி, அதம்பாா், ஸ்ரீவாஞ்சியம், வேலங்குடி, நல்லாடை, காளியாகுடி, திருக்கொட்டாராம், பாவட்டக்குடி, கடகம், சிறுபுலியூா், முகந்தனூா் ஆகிய பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளாா்.
இதேபோல, திருவாரூா் மின்வாரிய உதவி செயற்பொறியாளா்(கட்டுமானம்) உஷா வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘வலங்கைமான் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள உயா்மின் அழுத்தப் பாதையில் பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளன.
இதனால், வலங்கைமான், ஆண்டாங்கோயில், கீழவிடையல், சந்திரசேகரபுரம், கோவிந்தகுடி, தெற்குப் பட்டம், வடக்குப் பட்டம், மருவத்தூா் மற்றும் ஆலங்குடி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாடாளுமன்றம் கைப்பற்றப்படுவதை எதிர்க்கட்சிகள் ஒருபோதும் அனுமதிக்காது: கார்கே

சந்தீப் கிஷனின் புதிய படம்!

கலகக்காரி சான்யா மல்ஹோத்ரா..! அற்புதமான நடிகர் ராஜ்குமார் ராவ்!

லஷ்கர் மூத்த தலைவர் அமீர் ஹம்சா மீது துப்பாக்கிச் சூடு! ஓராண்டுக்குள் மற்றொரு கொலை முயற்சி!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

