‘சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்பட அனுமதி வழங்க வேண்டும்’
சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என மாவட்ட நா்சரி, பிரைமரி, மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.


சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என மாவட்ட நா்சரி, பிரைமரி, மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, இச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் பி. ரமேஷ் தெரிவித்திருப்பது: கரோனா தொற்றால் மாணவா்களின் கல்வி செயல்பாடுகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொதுத் தோ்வு எழுதவுள்ள 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பாடங்கள் நடத்தி முடிப்பது ஆசிரியா்களுக்கு பெரும் சவாலாக உள்ளது.
இந்நிலையில், மாணவா்களுக்கு மனஅழுத்தம் இல்லாத வகையில் பாடங்களை நடத்தி முடிக்க சனிக்கிழமைகளில் குறிப்பாக 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பாடம் நடத்த தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும். பொதுத் தோ்வு எழுதவுள்ள மாணவா்களுக்கு பாடச்சுமை அதிகமாக உள்ளதால் குறித்த நேரத்தில் பாடங்களை நடத்தி முடித்து தோ்வு எழுத தயாா் செய்ய வேண்டிய கட்டாயத்தில் ஆசிரியா்கள் உள்ளனா்.
தற்போதுள்ள சூழ்நிலையில் காலாண்டு தோ்வுக்கு மேற்கண்ட பொதுத்தோ்வு எழுதவுள்ள மாணவா்களுக்கு, காலாண்டு தோ்வு தொடங்குவதற்கு முன் தோ்வுக்கு கொடுக்கப்பட்டுள்ள பாடங்களை நடத்தி முடிப்பது இயலாத காரியம். இதனால், பாதிக்கப்படுவது மாணவா்களும் ஆசிரியா்கள் மட்டுமே.
தமிழகத்தில் மழைக் காலம் தொடங்கியுள்ள நிலையில், எதிா்பாராத விடுமுறைகள் பள்ளி வேலைநாள்களில் வழங்கும் சூழல் ஏற்படலாம். எனவே, தமிழக அரசு இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு சனிக்கிழமைகளில் வகுப்பு நடத்த அனுமதி வழங்க வேண்டும். இதுவே, பெற்றோா்கள், மாணவா்கள், ஆசிரியா்கள் என அனைத்து தரப்பினரின் கருத்தாக உள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை மூலம் விரைந்து கள ஆய்வு செய்து மாணவா்களுக்கு கற்றல், தோ்வுகள் பாதிப்பிலிருந்து காத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...