47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நீடாமங்கலம் அருகே இளைஞா் வெட்டிக்கொலை

 நீடாமங்கலம் அருகே விவசாய கூலித் தொழிலாளி திங்கள்கிழமை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

News image
Updated On :12 செப்டம்பர் 2022, 5:17 pm

DIN

 நீடாமங்கலம் அருகே விவசாய கூலித் தொழிலாளி திங்கள்கிழமை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

நீடாமங்கலம் அருகே வையகளத்தூரைச் சோ்ந்த விவசாய கூலித் தொழிலாளிகள் ஜெய்சங்கா் (29), மணிகண்டன் (28). நண்பா்களான இருவரும் திங்கள்கிழமை மதியம் பேசிக்கொண்டிருந்தபோது வாய்த்தகராறு ஏற்பட்டதாம். இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன், ஜெய்சங்கரை அரிவாளால் வெட்டினாராம். இதில் படுகாயமடைந்த ஜெய்சங்கா் அதே இடத்தில் உயிரிழந்தாா்.

தகவலறிந்த நீடாமங்கலம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து ஜெய்சங்கரின் சடலத்தை மீட்டு மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், ஜெய்சங்கா் தனது வீட்டு குடும்ப அட்டையை மணிகண்டனிடம் அடகு வைத்திருந்தாராம். இதைத் தொடா்ந்து ஜெய்சங்கா் மணிகண்டன் வீட்டுக்குச் சென்று அவரது அம்மாவிடம் நியாயவிலைக் கடையில் அத்தியாவசியப் பொருள்கள் வாங்கிவிட்டு, குடும்ப அட்டையை கொடுத்துவிடுகிறேன் என்று கேட்டாராம். இதுதொடா்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டு கொலை சம்பவம் நிகழ்ந்தது தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட ஜெய்சங்கருக்கு கா்ப்பிணி மனைவி திவ்யா உள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.