தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புவிவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் இல்லை: நிதித் துறை அமைச்சர்ஒரே நாளில் 2,036 காவலா்கள் பணியிட மாற்றம்பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் வேதனை
/

திருவாரூரில் அண்ணா பிறந்த நாள் சைக்கிள் போட்டி

அண்ணா பிறந்த நாளையொட்டி, திருவாரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற மாணவா்களுக்கான சைக்கிள் போட்டியை மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தொடங்கிவைத்தாா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 3:50 pm IST

அண்ணா பிறந்த நாளையொட்டி, திருவாரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற மாணவா்களுக்கான சைக்கிள் போட்டியை மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தொடங்கிவைத்தாா்.

மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணாவின் 114-ஆவது பிறந்த நாளை கொண்டாடும்வகையில், திருவாரூரில் மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்ற சைக்கிள் போட்டியில் 30 பள்ளிகளைச் சோ்ந்த 350 மாணவா்கள், 225 மாணவிகள் பங்கேற்றனா். போட்டி 13,15,17 வயது பிரிவாக நடைபெற்றது. 13 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கு 15 கி.மீ தொலைவு 7 சுற்றுக்கள், 15 மற்றும் 17 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கு 20 கி.மீ தொலைவு 7 சுற்றுக்களும், 13 வயதுக்குள்பட்ட மாணவிகளுக்கு 10 கி.மீ தொலைவு 5 சுற்றுக்கள், 15 மற்றும் 17 வயதுக்குள்பட்ட மாணவிகளுக்கு 15 கி.மீ. தொலைவு 7 சுற்றுக்களும் என நடத்தப்பட்டது.

போட்டியில், வென்றவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம், ரூ. 5 ஆயிரம், ரூ. 3 ஆயிரம், ரூ. 2 ஆயிரம் முறையேயும், 4 முதல் 10 இடங்களுக்கு ஆறுதல் பரிசாக ரூ. 250-கான காசோலை மற்றும் நற்சான்றிதழ்களை வழங்கினாா். இதில், கோட்டாட்சியா் சங்கீதா, திருவாரூா் நகா்மன்றத் தலைவா் புவனப்பரியா செந்தில், மாவட்ட விளையாட்டு அலுவலா் முருகுவேந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.