கூத்தாநல்லூர்: தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச் சங்க ஆலோசனைக் கூட்டம்

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச் சங்கத்தின் நிர்வாகிகள் அறிமுகம், செயல் உறுதியேற்புக் கூட்டம் மற்றும் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. 
கூத்தாநல்லூர்: தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச் சங்க ஆலோசனைக் கூட்டம்

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச் சங்கத்தின் நிர்வாகிகள் அறிமுகம், செயல் உறுதியேற்புக் கூட்டம் மற்றும் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. 

இக்கூட்டத்திற்கு, மாவட்ட முன்களப் பொறுப்பாளர் எம்.குமார் தலைமை வகித்தார். மாநிலப் பொருளாளர் ஏ.இரவிச்சந்திரன், மாநில அமைப்புச் செயலாளர் ப.இளஞ்சேரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நமராபாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முன்களப் பொறுப்பாளர் எஸ்.இராஜேஸ் வரவேற்றார்.

இந்த கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மாநிலத் தலைவர் கா.இராசபாலன் வாசித்தார். தீர்மானங்களில், திருவாரூர் மாவட்டம் முழுவதும்  இருசக்கர வாகனங்களில், 32 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, ஜீன் மாத இறுதியில், விவசாயிகளுக்கான விழிப்புணர்வு பேரணி நடத்தப்படும்.

மாவட்டத்தில் தூர் வாரப்படும் ஆறுகள், வாய்க்கால்கள் மொத்தம் எத்தனை, எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. யாருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது என்பதை மாவட்ட ஆட்சியர் வெளிப்படையான அறிக்கையை வெளியிட வேண்டும். அரசின் அனுமதி இல்லாமல் அனைத்து இடங்களிலும் இயங்கும் மதுக்கடைகளை அகற்றி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பண்ணை குத்தகை நிலங்களில் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு சீலிங் ஒப்படைப்பு செய்யப்பட்டதில், திருவாரூர் மாவட்டத்தில் 60 சதவீதத்திற்கு மேலானவர்களுக்கு பட்டா வழங்கப்பட வேண்டும். 

இதுவரை மாவட்டம் முழுக்க எவ்வளவு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. அறிவிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ள ஆற்று மணல் குவாரிகள், சகடு மண் குவாரிகள், செங்கல் கால்வாய்க்கான மண் எடுப்பு இவைகள் குறித்து, ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் எது எனவும், யாருக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது எனவும் அறிவிக்க வேண்டும். 

ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டப் பணிகளை தற்போதைய தமிழக அரசு அனுமதிக்கிறதா, இல்லையா என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். விரைவில் தேசிய நதிகளை இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

இக்கூட்டத்தில், மாநில துணைத் தலைவர் கே.பாலகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் எம்.என்.கே.கோவிந்தராஜ், மாவட்ட முன்களப் பொறுப்பாளர் கே.கருணாகரன், சிறப்பு அழைப்பாளர்கள் தொழிலதிபர் பீ.மோகன், மனோலயம் மன வளர்ச்சிக்  குன்றியோர் சிறப்புப் பள்ளி நிறுவனர் ப.முருகையன், தமிழக கட்டடத் தொழிலாளர்கள் மத்திய சங்க மாநில துணைத் தலைவர் ஆர்.சேகர், கே.ஏ.ஹாஜா நஜிமுதீன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாவட்ட முன்களப் பொறுப்பாளர் கே.லெட்சுமணன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com