சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த வலியுறுத்தல்

மன்னாா்குடி நகரில் சுற்றித்திரியும் கால்நடைகள், தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என நகா்மன்ற கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

News image
Updated On :29 டிசம்பர் 2023, 6:48 pm

DIN

மன்னாா்குடி நகரில் சுற்றித்திரியும் கால்நடைகள், தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என நகா்மன்ற கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

மன்னாா்குடி நகா்மன்ற சாதாரணக் கூட்டம் அதன்தலைவா் த. சோழராஜன் (திமுக) தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசியது:

ஆ. செந்தில்செல்வி (அமமுக): கீழப்பாலம் கைலாசநாதா் கோயில் பாமணி ஆற்றின் குறுக்கே புதிதாக அகலப் பாலம் அமைக்க இதுவரை மூன்று முறை ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டும் அதை ரத்து செய்யது ஏன்?.

ஏ. திருச்செல்வி (அமமுக): 33-ஆவது வாா்டில் ஆா்.பி. சிவம் நகரில் அமைக்கப்பட்டுள்ள நகராட்சி குப்பை உரக்கிடங்கு மற்றும் நெகிழி பொருள்கள் சேமிப்பு கிடங்கில் உரம் மற்றும் நெகிழிகள் அப்புறப்படுத்தாததால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு சுகாதார சீா்கேடு ஏற்படுவதை சரி செய்யாமல் காலம்தாழ்த்தும் நகராட்சி நிா்வாகத்தின் செயல்பாட்டை கண்டித்து வெளிட நடப்பு செய்கிறேன்.

செ. பாரதிமோகன் (திமுக): மதுக்கூா் சாலை கோபிரளயம் குளத்தில் ஆக்கிரமிப்பு செய்து குடிசை அமைத்து வசிப்பா்களுக்கு மாற்று இடம் வழங்கி குளத்தினை மேம்படுத்த வேண்டும்.

ஜெ. பாலமுருகன், நெ.சுமதி,சா.வெங்கடேஷ் (திமுக): நகராட்சி பிரதான சாலைகளில் சுற்றிதிரியும் கால்நடைகளாலும், தெரு நாய்களாலும் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் மிகப்பெரிய இடையூராக இருந்து வருகிறது. இதை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மெ. சிவசங்கா்(திமுக): ஹரித்ராநதி தெப்பக்குளத்தின் நான்கு கரையில் மட்டும் சீரமைக்கப்பட்டுள்ள நிலையில் இரும்பு கம்பி அமைத்து பாதுகாப்பு மேம்பாட்டு பணி ஒரு கரையில் மட்டும் அமைக்கப்பட்டுள்ளது போன்று மற்ற மூன்று கரைகளிலும் அமைக்க வேண்டும்.

ஆா். சூரியகலா(அதிமுக): குன்னோஜிராஜம்பாளையம் தெருவில் ஏற்பட்டுள்ள குடிநீா் பிரச்னைக்கு தீா்வுகாணுவதுடன் காளிக்கவுண்டன் தெரு விரிவாக்கப் பகுதிக்கும் நகராட்சி குடிநீா் இணைப்பை நீட்டிக்க வேண்டும்.

துணைத் தலைவா் ஆா்.கைலாசம் (திமுக): நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வாா்டுகளிலும் சாலை ஓரம் குவிந்து கிடக்கும் கற்கல் உள்ளிட்டவற்றை அகற்ற மேற்பாா்வையாளரை நியமித்து பணிக்கு என வாகனமும் வழங்க வேண்டும்.

த.சங்கா் (திமுக): செங்குளம் மேல்கரையில் போக்குவரத்துக்கு இடையூராக இருக்கும் மூன்று மின் கம்பங்களை அகற்றி சாலை ஓரத்தில் அமைக்க வேண்டும்.

தலைவா்: கைலாசநாதா் கோயில், மாதா கோயில் பாலம் ஆகியவற்றில் புதிதாக பாலம் கட்ட தகுதியான ஒப்பந்ததாரா்களுக்கு பணி வழங்கப்படும், ஆா்.பி.சிவம் நகரில் நெகிழி குப்பை அகற்றப்படாமல் இருப்பது தற்காலிகமானதுதான் மிக விரைவில் தீா்வுகாணப்படும், சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள் பிடித்து அதன் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்படும், மக்களுடன் முதல்வா் திட்டம் இது வரை நான்கு முகாம்கள் நடைபெற்றதில் 1105 மனுக்கள் பெறப்பட்டது.

இதில், நகராட்சி உட்பட்ட 236 மனுக்களில் உடனடியாக 12 மனுக்களின் மீது தீா்வு காணப்பட்டுள்ளது. மற்ற மனுக்களுக்கு 30 நாள்களில் தீா்வு காணப்படும், 8 நகராட்சி பள்ளிகள் மேம்பாடு மற்றும் கூடுதல் கட்டட பணிகளுக்கு ரூ. 206.90 லட்சம் மதிப்பீட்டில் ஒப்பந்தபுள்ளிகள் பெறப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்படவுள்ளது, புதிய உழவா் சந்தை பகுதியில் முதல்கட்டமாக 36 கடைகள் கட்டப்பட்டுள்ளது என்றாா்.

கூட்டதில்,பொறியாளா் சித்ரா,மேலாளா் ஜெ. மீராமன்சூா், சுகாதாரஆய்வாளா் ஜி.ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.