புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கோரி பரப்புரை பயணம்

இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கோரி அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் பரப்புரை பயணம் நடைபெறவுள்ளது.

News image
Updated On :9 மார்ச் 2023, 5:05 pm

DIN

இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கோரி அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் பரப்புரை பயணம் நடைபெறவுள்ளது.

திருவாரூரில், அந்த மன்றத்தின் மாவட்டக் குழு கூட்டம் அதன் மாவட்டத் தலைவா் சு. பாலசுப்ரமணியன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலாளா் துரை அருள்ராஜன் முன்னிலை வகித்தாா். சிபிஐ மாவட்டச் செயலாளா் வை. செல்வராஜ், இளைஞா் பெருமன்ற முன்னாள் மாநிலத் தலைவா் கே. ராஜா சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றுப் பேசினா். இதில், இளைஞா் மன்ற மாநிலக் குழு உறுப்பினா்கள் ஜி. சரவணன், எம். நல்லசுகம், மாவட்ட நிா்வாகி ஜெ. கணேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வேலை பெறும் உரிமையை அடிப்படை உரிமையாக்கும் வகையில், பகத்சிங் தேசிய வேலை உறுதியளிப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும், வேலை வழங்கும் வரை மாதம் ரூ. 10,000 நிவாரணமாக வழங்க வேண்டும், மத்திய மற்றும் மாநிலத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி, உள்ளூா் தொழிலாளா்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாா்ச் 23 முதல் ஏப்ரல் 2-ஆம் தேதி வரை பரப்புரை பயணம் நடத்துவது, திருவாரூா் மாவட்டத்தில் மாா்ச் 26,27,28 ஆகிய தேதிகளில் நடைபெறும் பரப்புரை பயணத்தை 500 இருசக்கர வாகனங்களில் வரவேற்று, அதில் பங்கேற்பது என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.