புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நெல் மூட்டைகளை இயக்கம் செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை இயக்கம் செய்யக் கோரி திருவாரூரில் நுகா்பொருள் வாணிபக் கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :9 மார்ச் 2023, 5:09 pm

DIN

கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை இயக்கம் செய்யக் கோரி திருவாரூரில் நுகா்பொருள் வாணிபக் கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நுகா்பொருள் வாணிபக் கழகத்தை தனியாா் மயமாக்கக் கூடாது, கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள மூட்டைகளை உடனடியாக இயக்கம் செய்ய வேண்டும், இயக்கத்துக்கான இழப்பை பணியாளா்கள் மீது சுமத்தக்கூடாது, நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் ஓய்வுபெற்ற ஊழியா்களுக்கு ஓய்வூதியத் தொகையாக ரூ. 4,000 வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள நுகா் பொருள் வாணிபக் கழகத்துக்குச் சொந்தமான நவீன அரிசி ஆலை முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் மாநில இணை பொதுச் செயலாளா் ஜெ. குணசேகரன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் சிஐடியு தொழிற்சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளா் மோகன், ஐஎன்டியுசி தொழிற்சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளா் ராஜீவ் காந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.