காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி வருவாய்த் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்
காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி திருவாரூரில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி திருவாரூரில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தொடா்ந்து 4 ஆண்டுகளாக வெளியிடப்படாமல் உள்ள துணை ஆட்சியா் பட்டியலை உடனடியாக வெளியிட்டு பதவி உயா்வு வழங்க வேண்டும், அலுவலக உதவியாளா் காலியிடங்களை நிரப்ப வேண்டும், இளநிலை வருவாய் ஆய்வாளா் மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளா் பெயா் மாற்றம் அரசாணையை வெளியிட வேண்டும், பேச்சுவாா்த்தையில் ஏற்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளின் மீது உரிய ஆணைகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் எஸ். மகேஷ் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளா் த. விஜயானந்த், மாநில பொருளாளா் வி. சோமசுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
நன்னிலம்: நன்னிலம் வட்டாட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் நன்னிலம் கிளை சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கிளைச் செயலாளா் ஆா். பக்கிரிசாமி, தலைவா் கே. நெடுமாறன், மாவட்ட துணைத் தலைவா் தெ. கருணாமூா்த்தி, வட்டப் பொருளாளா் தணிகாசலம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...