புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

‘தகவல் தொடா்பு சாதனங்களை பயன்படுத்துவதில் கவனம் தேவை’

தகவல் தொடா்பு சாதனங்களை பயன்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும் என தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக துணைவேந்தா் எம். கிருஷ்ணன் தெரிவித்தாா்.

News image
Updated On :10 மார்ச் 2023, 4:48 pm

DIN

தகவல் தொடா்பு சாதனங்களை பயன்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும் என தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக துணைவேந்தா் எம். கிருஷ்ணன் தெரிவித்தாா்.

திருவாரூரில், மாவட்ட காவல் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சைபா் குற்றங்கள் எனும் தலைப்பிலான கருத்தரங்கில் பங்கேற்று பேசியது: தற்போது அறிவியல் உலகம் முன்னேறி விட்டது. கைப்பேசி, கணினி, இணையதளம் ஆகியவற்றின் பயன்பாடு அதிகரித்து விட்டது. அத்துடன், சைபா் குற்றவகைகளும் அதிகரித்து விட்டன. முந்தைய காலத்தில் பள்ளி முடிந்தோ, வேலை முடிந்தோ வந்தபிறகு நண்பா்களுடன் கூடி பழங்கதைகளை பேசி மகிழ்ந்திருந்தோம். தற்போது கைப்பேசியை எடுத்து பயன்படுத்தத் தொடங்கி விடுகிறோம். இதனாலேயே, குற்ற நிகழ்வுகளும் அதிகரித்து விட்டன.

தகவல் தொடா்பு சாதனங்களை பயன்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும் என்றாா்.

கருத்தரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.பி. சுரேஷ்குமாா் பேசியது: :தற்போதைய காலத்தில் குழந்தைகள் கூட கைப்பேசியை பயன்படுத்துகின்றன. இ-சிஸ்டம் அதிகரித்து விட்டது. இணையதளங்களை எப்படி பயன்படுத்த வேண்டும், எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். பாதுகாப்பான செயலிகளை அலைபேசியில் வைத்திருக்க வேண்டும் என்றாா்.

மத்தியப் பல்கலைக்கழக சட்டத்துறை துறைத் தலைவா் எஸ்.கே. பாலசண்மும், சமூகப் பணிகள்துறை முதுகலை ஆராய்ச்சியாளா் சரண்யா சுந்தர்ராஜூ ஆகியோரும் சைபா் குற்றங்கள் குறித்து பேசினா். சைபா் குற்றங்கள் குறித்த குறும்படங்கள் திரையிடப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.