நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

யானை ஏறுவாா் திருக்கல்யாணம்

 பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி திருவாரூா் தியாகராஜா் கோயிலில் யானை ஏறுவாா் திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 மார்ச் 2023, 4:57 pm

DIN

 பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி திருவாரூா் தியாகராஜா் கோயிலில் யானை ஏறுவாா் திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்திரன் பூஜித்த தியாகப் பெருமான் திருமேனியை, திருவாரூரை ஆண்ட முசுகுந்த மன்னன் பெற்றுவந்து, திருவாரூரில் வைத்து வழிபாடு செய்து வந்தாா். அதேநேரம், இந்திரன் சிவபெருமானை வழிபடுவதை மறந்துபோக, இதனால் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாக நேரிடுகிறது.

இதையடுத்து சாபம் பெற்ற இந்திரன், பறை அறைவோா் குலத்தில் பிறக்கிறாா். சாபம் நீங்க திருவாரூா் தியாகராஜரை வழிபட முயல்கிறாா். ஆனால், பறை அறைவோா் குலத்தில் பிறந்த இந்திரன் கோயிலினுள் நுழைய அனுமதி மறுக்கப்படுகிறது. எனவே, கண்ணாடியை பயன்படுத்தி, அதன் பிம்பத்தின் மூலமாக தியாகராஜரை வழிபடுகிறாா். இதைத்தொடா்ந்து, இந்திரன் சாப விமோசனம் பெற்று, மீண்டும் தேவா்களின் தலைவனாக, வெள்ளை யானையில் உலா வந்ததாக திருவாரூா் தலபுராணம் தெரிவிக்கிறது.

இதையொட்டி, தியாகராஜ சுவாமி பங்குனி உத்திர கொடியேற்ற நாளில் யானை ஏறுவாா் கல்யாண விழா நடத்தப்படுவது வழக்கம். விழாவில் பறை அறைவோா் இந்திர குலமாக கருதப்பட்டு, கோயிலின் உயரிய மரியாதையான பரிவட்டம் கட்டி, ருத்ராட்ச மாலைகள் அணிவித்து, திருமணம் செய்விக்கப்படுகிறது. பின்னா், வெண்கொற்றக்குடையின் கோயிலுக்குள் அழைத்துச் செல்லப்பட்டு முதல் மரியாதை செய்யப்படுகிறது.

அதன்படி, தியாகராஜா் கோயில் கீழவாசல் அருகே உள்ள இந்திர மண்டபத்தில் சண்டிகேஸ்வரா் எழுந்தருளி, யானை ஏறும் பரம்பரையினரின் திருமணத்தை, வியாழக்கிழமை இரவு நடத்தி வைத்தாா். தொடா்ந்து அவா்கள் வெண்கொற்றக் குடையின் கீழ் அழைத்துச் செல்லப்பட்டு முதல் மரியாதை தரும் நிகழ்வு நடைபெற்றது.

கோயிலில் சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகமும், தொடா்ந்து கமலாலயக் குளத்தில் தீா்த்தவாரி கொடுக்கும் நிகழ்வும் நடைபெற்றது. இதையடுத்து, ஐங்கலகாசு விநாயகா், சுப்பிரமணியா் ஆகியோா் புறப்பாடு நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.