செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவி வழங்கல்

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவிகள் வழங்கப்பட்டன.

News image

கூட்டத்தில் பயனாளிக்கு காதொலி கருவியை வழங்கும் ஆட்சியா் தி. சாருஸ்ரீ.

Updated On :27 நவம்பர் 2023, 6:44 pm

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவிகள் வழங்கப்பட்டன.

ஆட்சியா் தி. சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், மனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 246 மனுக்கள் அளிக்கப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியா், அவைகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி குறித்த காலத்துக்குள் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவு கணக்கெடுப்பு பயிற்றுநா்களுக்கான பயிற்சி கையேடு வழங்கப்பட்டது. குறைதீா் கூட்டத்தில் வழங்கப்பட்ட மனுக்களின் அடிப்படையில், ரூ.2,780 மதிப்பில் காதுக்கு பின் அணியும் காதொலி கருவி ரூ. 83,400 மதிப்பில் 30 மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் கு. சண்முகநாதன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) லதா, மாவட்ட மாற்றுத் திறனாளி நலத்துறை அலுவலா் புவனா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.